மாநில அரசு பற்றிய தவறான மற்றும் அவதூறு மிக்க அறிக்கையை தே.மு சார்ந்த ஊடகம் வெளியிடுகிறது- குவான் எங்

14-வது பொதுத் தேர்தல் எதிர்நோக்கவிருக்கும் வேளையில் தேசிய முன்னணியின் (தே.மு) நட்பு ஊடகங்கள் பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீது அரசியல் அவதூறு சார்ந்த செய்திகளை வெளியேற்ற வேண்டாம் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அறிவுறுத்தினார்.

அண்மையில் சில தவறான மற்றும் அவதூறு அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், உத்துசான் மலேசியா, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST), தி ஸ்டார், பெர்னாமா அல்லது பெரித்தா ஹேரியன் ஆகிய ஊடகங்கள் பத்திரிக்கை தர்மத்தை மீறுவதாக குறிப்பிட்டார்.

தவறான அறிக்கை அறநெறியைப் பின்பற்றாமல் பத்திரிக்கை தர்மத்தை மீறுவதாகவும் அவதூறு செய்திகளைப் பரப்பி மோசடி செய்கிறது.

நேற்று (ஜனவரி 12) மாநில முதல்வர் அலுவலகத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனையிட்டதாக ஊடகங்களில் அவதூறான செய்தி வெளியிடப்பட்டது. தவறான செய்தியை வெளியிட்டு மாநில முதல்வரின் அலுவகம் மீது அவதூறு பரப்ப வேண்டாம்“, என ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணி, போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங், முதல்வரின் அரசியல் செயலாளரும் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினருமான வோங் ஒன் வாய் மற்றும் புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் யப் சூ உய் கலந்து கொண்டனர்.

ஜனவரி 11-ஆம் தேதி மாநில முதல்வருடன் தேசிய அமானா கட்சி தலைவர் ஹஜி முகமது சாபு மற்றும் டத்தோ சய்ப்புடின் நாசுத்தின் இஸ்மாயில்(முதல்வரின் திட்டமிடல் ஆலோசகரும் மக்கள் நீதிக் கட்சியின் தேசிய செயலாளர்) மாலை மணி 4.00 முதல் 5.00 வரை உடன் இருந்தனர்.

மேலும், பினாங்கு உணவு வங்கி திட்டத்தின் வாயிலாக ஏழை மற்றும் வசதி குறைந்த பொது மக்களுக்கு தரமான உணவு விநியோகத்தை பற்றி உரையாடியதாக குவான் எங் தெரிவித்தார்.

மாநில முதல்வரின் அலுவலகம் எங்கே சோதனையிடப்பட்டது, நான் இன்னமும் கடமையில் தான் ஈடுப்படுவதாகமுதல்வர் கூறினார்.