முல் மரங்கள் நூல் வெளியீட்டு விழா

பட்டர்வொர்த் கவிஞர் செ.குணாளனின் முல் மரங்கள் எனும் நூல் வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வு பட்டர்வொர்த் மாரியம்மன் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் வருகையளித்தார். இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் பொருட்டு கவிஞர் செ.குணாளனின் ‘முல் மரங்கள்’ எனும் நூலிற்கு ரிம 5000-ஐ மானியமாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் வழங்கினார். மேலும், கவிஞர் செ.குணாளனின் படைப்புகளைக் கண்டு தாம் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்.

மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுக்குப் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்தார் கவிஞர் செ.குணாளன்.
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுக்குப் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்தார் கவிஞர் செ.குணாளன்.

 

இந்நூல் கவிஞர் செ.குணாளனின் 2வது புதுக்கவிதை படைப்பாக அமைகிறது. 2005-ஆம் ஆண்டு ‘படிமக் குறிப்புகள்’ என்ற முதல் புதுக்கவிதை நூல் வெளியிட்டார் என்றால் மிகையாகாது. இந்தக் கவிஞரின் முல் மரங்கள் என்ற நூல் இலக்கியம், சமூகவியல், தமிழர் வரலாறு என சமுதாய சிந்தனையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

இந்த முல் மரங்கள் நூல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் பினாங்கு மாநில வெற்றிவேல் புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த நூல் தற்கால மற்றும் எதிர்கால தமிழர்களின் கலை, கலாச்சார, பண்பாடு பற்றி சிறப்பாகச் சித்தரிக்கப்படுவதால் அதனை வருங்கால மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்த பயன்படும் என்பது திண்ணம்.

கவிஞர் செ.குணாளன் அவர்கள் வருகை புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றினைத் தெரிவித்துக் கொண்டார்.