விற்பனை சேவை வரிக்கு விலக்கு வழங்க மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்படும் – மாநில முதல்வர்

Admin

 

ஜோர்ச்டவுன் – விற்பனை சேவை வரிக்கு (எஸ்.எஸ்.தி) விலக்கு வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கவிருப்பதாக
பினாங்கு மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் வாய்மொழி கேள்வி பதில் நேரத்தின்போது பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மகாதீர் பின் அசீஸ் தொடுத்த கேள்விக்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்கு முன் மத்திய அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.தி சேவை வரிக்காக மாநில அரசுக்கு எவ்வித வரி விலக்கும் கிடைக்கவில்லை; மாறாக எஸ்.எஸ்.தி வரிக்கு விற்பனை சட்டம் 2018-இன் கீழ் விலக்கு வழங்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்படும் என குறிப்பிட்டார். இந்த வரி விலக்கில் இருந்து கிடைக்கப்பெறும் நிதியை மக்கள் நல திட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கொன் யாவ்.

இந்த எஸ்.எஸ்.தி வரி விலக்கு மூலம் பினாங்கு மாநிலத்தில் கூடுதல் திட்டங்களை அமல்படுத்தவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் முடியும் என்பது வெள்ளிடைமலையே.