விளையாட்டு வீரர் பாயிஸ் சப்ரிக்கு ரிம50,000 சன்மானம்

பாயிஸ் சுப்ரி பெற்ற புஸ்காஸ் விருதுடன் மாநில முதல்வர்

கூட்டமைப்பு அனைத்துலக காற்பந்து சங்கம் (பிபா) வழங்கும் தலைச்சிறந்த விருதாக கருதப்படும் ‘புஸ்காஸ்’ விருதை பினாங்கு காற்பந்து வீரர் பாயிஸ் சுப்ரி பெற்று மலேசியாவிற்கும் பினாங்கு மாநிலத்திற்கும் பெருமை சேர்த்தார். இந்த விருதை சுவிர்லாந்து நாட்டில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பெற்றுக்கொண்டார்.

பினாங்கு மாநில விளையாட்டு வீரர் பாயிஸ் சுப்ரியின் வருகையை வரவேற்கும் வகையில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் அரசியல் தலைவர்கள் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகையளித்தனர். அனைத்துலக ரீதியில் வரலாறு படைத்த வீரருக்கு மாநில அரசு ரிம50,000 மானியம் வழங்குவாக செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். மேலும், அவரது சாதனைக்கு கடந்த ஆண்டு மாநில அரசு ரிம10,000 வழங்கியதை மாநில முதல்வர் மேலும் கூறினார்.

விளையாட்டு வீரரின் வருகையைப் பறைச்சாற்றும் வகையில் பினாங்கு காற்பந்து சங்கம், காற்பந்து ஆதரவாளர்கள், பாய்ஸ் சப்ரி குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகையளித்தனர்.

இந்த விருதுப் பெற்ற முதல் ஆசிய விளையாட்டு வீரர் எனப் பெருமிதம் கொள்வதோடு அனைத்துலக காற்பந்து வீரர்களான கிரிஸ்தியானோ ரொனால்டோ மற்றும் சேர் அலேக்ஸ் பெர்குசோன் பட்டியலில் இடம்பெறுவது சாலச்சிறந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மலேசிய சூப்பர் லீக் போட்டியில் பாயிஸ் சுப்ரி அடைத்த இயல்பியல் மீறிய கோல்-க்கு அனைத்துலக ரீதியில் 59.46% வாக்குகள் பெற்று இந்த விருது தட்டிச்சென்றார். இந்த கோல் பினாங்கு மற்றும் பாஹாங் மாநிலத்துடன் இடையிலான காற்பந்து போட்டியில்(4-1) அடித்தார் என்றால் மிகையாகாது.