ஸ்ரீ டெலிமா தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை தலைச்சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த பண்டிகையை மெருகூட்டும் வகையில் பினாங்கு மாநிலத்தில் ஆங்காங்கே தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. அவ்வகையில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய

திரு நேதாஜி இராயர் அவர்களின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு தாமான் புவா பாலா இளைஞர் மற்றும் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக் தமது பொற்கரத்தால் தீபாவளி அன்பளிப்பு பணத்தைப் பிள்ளைகளுக்கு  வழங்கினார். உடன் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர்.
பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக் தமது பொற்கரத்தால் தீபாவளி அன்பளிப்பு பணத்தைப் பிள்ளைகளுக்கு வழங்கினார். உடன் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர்.

இந்நிகழ்வில் பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு நேதாஜி இராயர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். லெங்கோக் பாவா நகரம் மற்றும் சமூக முன்னேற்ற குழுவினர் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அதன் பிறகு, குத்து விளக்கேற்றி தென்றல் நடனமணிகளின் நடனத்துடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ஆடல் பாடல் என இயல் இசையுடன் திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களின் வருகை புற்றீசல் போல் காணப்பட்டனர். சுமார் 400 பேருக்கு உணவு பதார்த்தங்கள் வழங்கப்பட்டன. அதோடு, தனித்து வாழும் தாய்மார்கள் வசதி குறைந்தவர்கள் என 40 பேருக்குப் பரிசுக்கூடை வழங்கியது பாராட்டக்குறியதாகும். இதனிடையே, சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தீபாவளி அன்பளிப்பு பணம் 60 பிள்ளைகளுக்கு பத்து மாவுங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் மாலிக் பொற்கரத்தால் வழங்கினார்.

நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர் அனைத்து மக்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதோடு, பினாங்கில் பிரதான சாலைகள் குழிகளாகவும் சீரான நிலையில்  இல்லாததால், இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வுக் காணவிருப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டு குழுத் தலைவர் திருமதி கலாதேவி உரையாடுகையில் எதிர்பாராத அளவிற்கு மக்களின் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதோடு, இந்நிகழ்வு வரும் காலங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என மேலும் நம்பிக்கைத் தெரிவித்தார். இதில் பல இன மக்கள் கலந்து சிறப்பித்தது பினாங்கு வாழ் மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தைச் சித்தரிக்கின்றது.