தெலோக் இண்டா அடுக்குமாடி தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு

தெலோக் இண்டா அடுக்குமாடி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு பினாங்கு மாநில அரசு தீர்வுக்குக் கண்டுள்ளது. இக்குடியிருப்பில் 1024 யுனிட் வீடுகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்நாட்டு மக்கள் மற்றும் 40% அந்நிய தொழிலாளர்களும் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் சமீப காலமாகத் தண்ணீர் பிரச்சனைக்கு ஆளாகினர். அதாவது, மின்குழாய் சுழற்சியில் தடை ஏற்பட்டதால் குடியிருப்பு வீடுகளுக்கு நீரின் அளவு மெதுவாகச் சென்றுள்ளது. இப்பிரச்சனையைக் களையும் நோக்கத்தில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி சுமார் ரிம108,000 செலவில் குழாய்களைப் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டார்.

இங்கு ஈ1 மற்றும் ஈ2 பிரிவுகளில் உள்ள மின்குழாய் மற்றும் தண்ணீர் தொட்டிகள் SJD CONSTRUCTION & ENG CO-யின் மூலம் பழுதுப்பார்க்கப்பட்டது. பழுது வேலைகள் முடிந்ததும் தெலோக் இண்டா அடுக்குமாடிக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டார் மாநில இரண்டாம் துணை முதல்வர். அதனையடுத்து, செய்தியாளர் சந்திப்பில் உரையாடுகையில் இக்குடியிருப்பு மக்களின் பிரச்சனைகளுக்குத் தாம் விரைந்து தீர்வுக் காண்பதாகக் கூறினார். அண்மையில் மின்தூக்கி ஒன்றை பழுதுபார்த்ததையும் சுட்டிக் காட்டினார். அதோடு, சுற்றுப்புற தூய்மையையும் பொது உடைமைகளையும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பழுது பார்க்கப்பட்ட மின்குழாயைப் பார்வையிடுகிறார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.
பழுது பார்க்கப்பட்ட மின்குழாயைப் பார்வையிடுகிறார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

தெலோக் இண்டா அடுக்குமாடியில் வாழும் பொது மக்கள் மாநில அரசின் உதவிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். குழாய் பழுதுப்பார்த்த பிறகு தண்ணீரின் அளவு சீராக இருப்பதாக அக்குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.