2017 பட்ஜெட்: மேம்பாடு & சமூகநல திட்டங்களுக்கு முன்னுரிமை

2015-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையுடன் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உட்பட மாநில அரசு தலைவர்கள்.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ரிம1.45பில்லியன் மதிப்பிலான வரவுச்செலவுத் திட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரவுச்செலவு திட்டம் “தொழில்துறை மற்றும் சமூகநல மேம்பாடு” என்ற கருப்பொருளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு வரவுச்செலவுத் திட்டத்தில் நிர்வாகத் திட்டத்திற்கு ரிம564.51 மில்லியன் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரிம887 மில்லியன் என மொத்தமாக ரிம1.45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு வரவுச்செலவுத் திட்டத்தில் ரிம66.7 மில்லியன் நிதி பற்றாக்குறை எதிர்நோக்கப்படுகிறது. எனினும் மாநில முதல்வர் ஆண்டு இறுதியில் கூடுதல் வருமானம் பெறப்படும் என உறுதியாகத் தெரிவித்தார். அதோடு, நிதி பற்றாக்குறை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமூகநல திட்டங்கள் மேற்கொள்ள எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

2017 வரவுச்செலவுத் திட்டம் ஒரு கண்ணோட்டம்:

பொருளாதார மேம்பாடு
மாநில அரசு உற்பத்தி மற்றும் சேவை துறையில் அதிகமான கவனம் செலுத்தும்.
மாநில உற்பத்தி துறையில் முதல் 8 மாதத்தில் ரிம3.77பில்லியன் முதலீடுச் செய்யப்பட்டுள்ளது.
சிறு & நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த ரிம20 லட்சம் ஒதுக்கீடு
சிறு & நடுத்தர தொழில்துறை ஊக்குவிக்க 27 யூனிட் தொற்சாலைகள் புக்கிட் மிஞ்ஞா தொழிற்பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிவாரணத் திட்டம்
மாநில அரசு ரிம220லட்சம் நிதி ஒதிக்கீடு
இந்நிதி ஒதுக்கீடு பயன்படுத்தி நீர் பாசன மற்றும் வடிகால் துறை கால்வாய் மேம்பாடு, ஆற்று நதிக்கரை ஆழப்படுத்துதல்& விரிவுப்படுத்துதல், வடிகால் உள்கட்டுமான பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்
இந்நிதியம் பயன்படுத்தி வெள்ளப் பேரிடர் தவிர்க்கப்படும்.

படம் 2: வெள்ள நிவாரணத் திட்டம்

விளையாட்டு மேம்பாடு
‘ஒலிம்பிக்’, மலேசிய விளையாட்டு, ‘பராலிம்பிக்’, காது கேளாதோர் போட்டி விளையாட்டு ஆகிய விளையாட்டுகளில் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ந்த பினாங்கு விளையாட்டு வீரர்களுக்கு ரிம 687,625.00 சன்மானம் வழங்கப்பட்டன.
மலேசிய போட்டி விளையாட்டு வீரர்களுக்கு நிகராக ‘பராலிம்பிக்’ விளையாட்டு வீர்ர்களுக்கும் சமமான சன்மானம் வழங்கப்படும். இதன் மூலம் சமத்துவம் பாதுகாக்கப்படுகிறது.
புதிய ஹொக்கி அரங்கம் அமைக்கப்படும்.
புதிய “விளையாட்டு அரங்கம் பாதுகாப்பு வாரியம்” அமைத்து அனைத்து அரங்கம் பராமரிக்கப்படும்.
மதிப்பீட்டு வரி விலக்கு
மலிவு விலை மற்றும் நடுத்தர மலிவு விலை வீடமைப்புக் குடியிருப்பில் வாழும் மக்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பீட்டு வரி விலக்கு மீண்டும் அடுத்த ஆண்டும் தொடரும். இத்திட்டத்திற்கு ரிம14,093,705.78 ஒதுக்கீடு.
மேலும், மாநில அரசு இவ்விரு ஊராட்சி மன்றங்களுக்கு விதிக்கப்படும் பொருள் சேவை வரியை (ரிம46.2 லட்சம்) ஏற்றுக்கொள்கிறது
பிற சொத்துகளுக்கு 6% வரி விலக்கு அளிக்கிறது.

படம் 3: மதிப்பீட்டு வரி விலக்கு

பெண்கள் மேம்பாடு
“gender responsive and budgeting எனும் பெண்கள் முன்னேற்ற திட்டத்தை அனைத்துலக ரீதியில் வழிநடத்த பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத்திற்கு வருடாந்திர நிதி ஒதிக்கீடு ரிம1.5 லட்சம் வழங்கப்படும்.

தங்கத் திட்டம்
தங்கத் திட்டத்திற்கு இதுவரை ரிம412.63லட்சம் ஒதுக்கீடு
புதிதாக பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கும் வருடத்திற்கு ரிம600 சன்மானம்
படம் 4: தங்கத் திட்டம்

மலிவு விலை வீடமைப்புத் திட்டம்
மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் 26,255 வீடுகள் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்க திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
வசதி குறைந்த பொது மக்கள் வீடுகள் வாங்க சிரமப்படுவதால் ‘வாடகைக்கு மனை வாங்கும் திட்டத்தின்’ கீழ் 155 வீடுகள் கட்டப்படுகிறது.
பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மாநில அரசு பத்து உஜோங், பாகான் டாலாம் பகுதியில் 600 மலிவு விலை வீடுகளும், பிறையில் 1,200 வீடுகளும் அமைக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு போனஸ்

2016-ஆம் ஆண்டுக்கான மற்றோறு அரைமாத போனஸ் டிசம்பர் மாதம் வழங்கப்படும். ரிம700-ஐ பெறுவர். 1502 காபா (kafa) கண்காணிப்பாளர் சமயப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சீன தனியார் பள்ளி ஆசிரியர்கள் ரிம300-ம் .இஸ்லாம் பாலர்ப்பள்ளி ஆசிரியர்கள் ரிம200 பெறுவர்.