23 ஆண்டுகளுக்குப் பின் சென்சூரி அடுக்குமாடி குடியிருப்புக்கு புத்துயிர் – முதல்வர்

Admin
சென்சூரி அடுக்குமாடி குடியிருப்பில் சாயம் பூசும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலாம் துணை முதல்வர் டத்தோ ஶ்ரீ ரஷிட் பின் அஸ்னோன்.

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட 38 மாடிகளைக் கொண்ட சென்சூரி அடுக்குமாடி குடியிருப்புக்கு புத்தியிர் வழங்க மாநில அரசின் முயற்சியில் சாயம் பூசப்பட்டது.

இத்திட்டத்திற்காக மாநில முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம70,600.00, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயபாலன் ரிம 20,000.00, முதலாம் துணை முதல்வர் டத்தோ ஶ்ரீ ரஷிட் பின் அஸ்னோன் ரிம 16,500.00, மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் 19.5% என மொத்தமாக ரிம153,600.00 நிதி ஒதுக்கீட்டில் சென்சூரி அடுக்குமாடி குடியிருப்புக்குச் சாயம் பூசப்பட்டது பாராட்டக்குரியதாகும்.

இத்திட்டம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் ஆதரவோடு வருகின்ற 30 ஏப்ரல் 2017-இல் சாயம் பூசும் வேலைகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசு தனியார் அல்லது அரசு என வேறுப்பாடின்றி அனைத்து தரப்பினருக்கும் உதவிகளை நல்குவதன் வாயிலாக பினாங்கு மக்கள் நலன் பாதுகாக்கும் மாநிலம்என்பதனை சித்தரிக்கின்றது.