தென் செபராங் பிறை வெள்ளப் பிரச்சனைத் தீர்வுக் காணப்படும்

குப்பைகளால் நிறைந்து வழியும் வாய்க்கால்
குப்பைகளால் நிறைந்து வழியும் வாய்க்கால்

தென் செபராங் பிறை மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் பொது மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பினாங்கு மாநில அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சுமார் ரிம50லட்சம் தேவைப்படும் என்றார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். தெலுக் இப்பியில் அமைந்திருக்கும் நீர் பாய்ச்சும் இயந்திரம் சரிவர இயங்காததால் அதனைப் புதுப்பிக்க ரிம10லட்சம் மற்றும் பெரிய கால்வாய்களைச் சீரமைக்க ரிம25 லட்சம் தேவைப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் அரசு இலாகா அதிகாரிகள் வெள்ளப் பேரிடர் பகுதியைப் பார்வையிட்டனர்.
ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் அரசு இலாகா அதிகாரிகள் வெள்ளப் பேரிடர் பகுதியைப் பார்வையிட்டனர்.

இம்மாவட்டத்தில் 20 இடங்களில் கடுமையாக வெள்ளம் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக சிம்பாங் அம்பாட் பகுதியின் தாமான் மேராக், தாமான் தங்லிங், கம்போங் மஸ்ஜிட் ஆகிய இடங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது.
தொடக்கமாக, நிபோங் திபால் தாமான் நூரி விக்டோரியா பகுதிகளில் வெள்ள நிவாரண மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும். இந்த மேம்பாட்டுத் திட்டத்தை முழுமையாகச் செய்து முடிக்க பினாங்கு மாநில அரசாங்க வடிகால் நீர் பாசன இலாகா, செபராங் பிறை நகராண்மைக் கழகம், மாவட்ட இலாகா, பொதுப்பணி ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றும் என உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை, வெள்ள நிவாரண சேவைக்குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார்,
பல ஆண்டு காலமாக வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படும் இத்தொகுதி மக்களுக்குக் கூடிய விரைவில் மாநில அரசு உதவிப்புரியும் என அறிவித்தார்.} else {