தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டி
இரண்டாவது முறையாகப் பினாங்கு மாநிலம் அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துகிறது. இப்போட்டியினை கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகம், மாநில விளையாட்டு மன்றத்துடன் இணைந்து தொகுத்து வழிநடத்துகின்றது. இந்தக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகம் மற்றும் மாநில விளையாட்டு மன்றத்தின் அயராத உழைப்பினால் இப்போட்டி மாநில...