பாகான் டாலாமில் மூன்று முக்கிய பகுதிகளின் உள்கட்டமைப்பு விரைவில் மேம்படுத்தப்படும்

Admin
img 20260717 wa0043

பாகான் டாலாம் – மாநில அரசாங்கம், பாகான் டாலாம் மாநிலத் தொகுதியில் உள்ள மூன்று முக்கியப் பகுதிகளில் பழுதடைந்த பொது உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, சுமார் ரிம6 மில்லியன் கூடுதல் நிதியைக் கோருமாறு செபராங் பிறை மாநகர் கழகத்திற்கு (எம்.பி.எஸ்.பி) அறிவுறுத்தியுள்ளது.

இந்த மேம்பாட்டுப் பணிகள் தாமான் மெவா, தாமான் பாகான் மற்றும் கம்போங் பெங்காலி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். அங்கு சாலைகள், சாலை ஓரங்கள் மற்றும் தற்போதுள்ள வடிகால் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
img 20260717 wa0102

இத்திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவாக தாமான் மெவாவிற்கு ரிம1.965 மில்லியன், தாமான் பாகானுக்கு ரிம1.415 மில்லியன் மற்றும் கம்போங் பெங்காலிக்கு ரிம2.63 மில்லியன் ஒதுக்கீடு தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
img 20260717 wa0090

இது குறித்து முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், மலேசிய சாலைப் பதிவு தகவல் அமைப்பு (MARRIS) திட்டத்தின் கீழ் தேவையான கூடுதல் நிதியைப் பெறுவதற்காக, மாநில நிதிப் பிரிவு (BKN) பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் வகையில் எம்.பி.எஸ்.பி.யின் பொறியியல் துறை அதிகாரப்பூர்வமாக நிதி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் என்று தெரிவித்தார்.
img 20260717 wa0104

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு மாநிலம் ஆண்டுதோறும் மலேசிய சாலைப் பதிவு தகவல் அமைப்பு (MARRIS) திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று வருவதாகக் கூறினார்.

img 20260717 wa0045
மத்திய அரசாங்கத்திடமிருந்து பினாங்கு மாநிலம் ஆண்டுதோறும் சுமார் ரிம300 மில்லியன் MARRIS நிதியைப் பெற்று வருகிறது. தற்போது, இந்நிதியின் பயன்பாட்டு வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வடிகால் மற்றும் சரிவுப் பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
img 20260717 wa0099

“2026ஆம் ஆண்டிற்காக செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ரிம150 மில்லியன் நிதியைக் கோரியிருந்தது. எனினும், MARRIS திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து ரிம99 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“எனவே, பாகான் டாலாம் பகுதியின் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, திட்ட அடிப்படையில் கூடுதல் நிதியைக் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்,” என்றார்.

நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தகவல் தொடர்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், ஜூலை 17, 2026 அன்று தாமான் மெவா பகுதியில் மேற்கொண்ட சந்திப்புக் கூட்டத்தின் போது இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்; பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அவரிகளின் பிரதிநிதியாக டான் கோங் ஷோங்; எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படெருல் அமின் அப்துல் ஹமீத் மற்றும் எம்.பி.எஸ்.பி பொறியியல் துறை இயக்குநர் முகமது சுக்ரி சைட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய குமரன், இப்பழமையான குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக முழுமையான மேம்பாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை என்றும், இதனால் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் (OKU) உட்பட அப்பகுதி மக்களின் நடமாட்டம் பாதிக்கப்படுவதாகவும் வலியுறுத்திக் கூறினார்.

இதற்கிடையில், கூடுதல் MARRIS நிதிக்கான விண்ணப்பம் BKN-ஆல் பரிசீலிக்கப்பட்டு நடப்பு ஆண்டிற்குள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுவரை சாலைக் குழிகளைச் சரிசெய்தல் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளைத் தனது துறை மேற்கொள்ளும் என்று அகமது சுக்ரி தெரிவித்தார்.