பாகான் டாலாம் மக்களுக்கு புதிய ஜிம் மற்றும் லாண்டரி திறப்பு விழாக் கண்டது

Admin
kumaran gym 1

பாகான் – பாகான் டாலாம் பகுதியில் வாழும் மக்களுக்கு உடற்பயிற்சி செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், செஜாத்தி மடானி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய சமூக வசதியான பாகான் டாலாம் பவர் ஹவுஸ் ஜிம் (Bagan Dalam Power House Gym) தற்போது அதிகாரப்பூர்வமாக திறந்து விழாக் கண்டது.

இந்த ஜிம் மையத்தை டிஜிட்டல் அமைச்சர் கோபிந் சிங் டியோ மற்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் இணைந்து திறந்து வைத்தனர்.

அதே நிகழ்ச்சியில், பட்டர்வொர்த் ஆர்ட் வார்க் லாண்டரி திட்டமும்
(Butterworth Art Walk Laundry) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் செஜாத்தி மடானி திட்டத்தின் கீழ் மொத்தமாக ரிம400,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜிம் மையம் குறிப்பாக இளைஞர்கள் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க உதவும். மேலும் இது சமூகத்தினர் பல பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய நேர்மையான சமூக இடமாகவும் அமையும்.

அதே நேரத்தில், இந்த லாண்டரி சேவை உள்ளூர் மக்களுக்கு எளிதாக அணுகக்கூடிய மற்றும் மலிவான துவைப்புச் சேவையை வழங்கும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

“மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முக்கிய பங்கு வகித்த அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். இந்த முயற்சி சமூகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

“மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முக்கிய பங்கு வகித்த அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். இந்த முயற்சி சமூகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமை மற்றும் கூட்டுப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

“இந்த முயற்சி சமூகத்தை வலுப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்று குமரன் தெரிவித்தார்.

பாகான் டாலாம் பவர் ஹவுஸ் ஜிம் திட்டம் ரிம200,000 ஒதுக்கீட்டுடன் அங்கீகரிக்கப்பட்டு, பாகான் டாலாம் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு செயற்குழு அமைப்பின் மூலம் எம்.பி.கே.கே பாகான் லுவார் உடன் இணைந்து செயல்படுத்தப்படும். இந்த மையம் உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்கும் சமூக ஒத்துழைப்பு செயல்பாடுகளுக்கும் ஒரு முக்கிய இடமாக அமையும்.

இதற்கிடையில் லாண்டரி திட்டமும் ரிம200,000 நிதியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எம்.பி.கே.கே கம்போங் பாக் அபு மற்றும் எம்.பி.கே.கே ஹெங் சோங் தியான் உடன் இணைந்து செயல்பாடுக் காண்கிறது. இதன் மூலம் சுற்று வட்டார மக்களுக்கு எளிதான மற்றும் நியாயமான கட்டணத்தில் லாண்டரி சேவையைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

kumaran gym 2

இந்த நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ ஈ கின், மற்றும் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.