இலஞ்ச ஊழல் இல்லாத அரசால் மட்டுமே தங்கத்திட்டம் சாத்தியமாகிறது

Admin
தங்கத் திட்டத்தில் நிதியுதவி பெற்றுக்கொண்ட மூத்தகுடிமக்கள்பினாங்கு வாழ் மூத்தகுடிமக்களை அங்கீகரிக்கும் வகையில் 2018-ஆம் ஆண்டுக்கான தங்கத்திட்டம் எட்டாவது முறையாக இனிதே மலர்ந்தது.

இத்திட்டம் பிறை சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு இரண்டாம் துணை முதல்வருமான பேராசிரியர் ப.இராமசாமி தலைமையில் தாமான் இண்ராவாசே மலாயன் வங்கியில் நடைபெற்றது.

இந்த ஆண்டு சுமார் 3,422 மூத்தகுடிமக்கள் சன்மானமாக ரிம130.00 பெற்றுக்கொண்டனர். இந்த நிதியுதவி வழங்கும் திட்டம் இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை நேரில் சென்று பார்வையிட்ட பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பினாங்கு மாநில அரசின் இலஞ்ச ஊழல் அற்ற நிர்வாகத்தினால் மட்டுமே இத்தங்கத் திட்டங்கள் சாத்தியமாவதாகக் குறிப்பிட்டார். மேலும், இவ்வாண்டு மூத்தக்குடிமக்கள் தங்கத் திட்டத்தின் உதவித்தொகை ரிம 100 இருந்து ரிம130 ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசின் இந்த உதவித்தொகைக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு மாநில அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதை பிரதிப்பலிப்பதாக உதவித்தொகை பெற்றுக்கொண்ட திருமதி அம்பிகாபதி (வயது 67) முத்து செய்தி நாளிதழிடம் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஶ்ரீ டெலிமா தொகுதியில் 5,848 மூத்தக்குடிமக்கள் ரிம 130.00 உதவித்தொகை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.