இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி அவசியம் – பேராசிரியர்

பட்டர்வொர்த் –  “இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பெரியார் வகுத்து வைத்துள்ள சிந்தனைகளை நன்கு ஆராய்ந்து அதனை நம் வாழ்வில் செயல்படுத்துவோம். இதன் மூலம் நாம் சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும்,” என இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப்பின் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வியும் மனித வளமும் அவசியம் என பேராசிரியர் வலியுறுத்தினார். எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கல்வியில் அல்லது தொழில்திறன் துறைகளில் சிறந்து விளங்க சிறந்த வழிகளை வகுக்க வேண்டும் என அவர் கோரிக்கையை தமதுரையில் முன்வைத்தார்.

மேலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் இம்மாநிலத்தில் இதுவரை ஓர் இந்து ஆலயம் கூட உடைக்காமல் பாதுகாக்கிறது, என்றார். இவ்வாரியத்தின் மூலம் அதிகமான இந்திய மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மேற்கல்வியைத் தொடர உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது.

15 ஆண்டுகள் பினாங்கு மாநிலத்தை நம்பிக்கை கூட்டணி அரசு அரசியலமைத்ததில் அபார வளர்ச்சி கண்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மலேசியாவில் உள்ள பிற மாநிலங்கள் இதனை எடுத்துக்காட்டாக  கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பினாங்கு அரசு துறைகளில் இந்தியர்களின் வேலை வாய்ப்புகள் நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேராசிரியர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி; டத்தோஸ்ரீ புலவேந்திரன்; டத்தோ சௌந்தரராஜன், ம.தி.க தலைவர் ச.த.அண்ணாமலை மற்றும் மேலும் பலர் கலந்து கொண்டானர்.

“பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அமல்படுத்தும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையையும் பொது மக்கள்  தொடர்ந்து நிலைநாட்டுவதை கொள்கையாக கொண்டுள்ளது.

“மதம், இனம் பின்னணி மற்றும் அரசியல் கொள்கைகளை பொருட்படுத்தாமல், நாம் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அண்மையில் சிலாங்கூர் மற்றும் பகாங் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் இன மொழி பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதையும் அரசியல் நோக்கங்களுக்காக சில தரப்பினர்கள் சர்ச்சைகளையும்  ஏற்படுத்தினர்,” என பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் வன்மையாகச் சாடினார்.

“நம் பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக அனைத்து திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்”, என லிம் குவான் எங் பட்டர்வொர்த், ஶ்ரீ மாரியம்மன் அரங்க வளாகத்தில் மலேசிய திராவிடர் கழக(ம.தி.க ) பினாங்கு கழக ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தமதுரையில் இவ்வாறு வலியுறுத்தினார்.

மூன்று கரும்புகளை பிரமிட் வடிவத்தில் நிறுத்தி அதில் மண் பானையில் வைத்து பொங்கல் கொண்டாடினர்.

இப்பொங்கல் கொண்டாட்டத்தில் பொங்கல் கொண்டாட்டம் தழிழர்களின் மரபினை நிலைநாட்டி கொண்டாடப்பட்டது. மூன்று கரும்புகளை பிரமிட் வடிவத்தில் நிறுத்தி அதில் மண் பானையில் வைத்து பொங்கல் கொண்டாடினர். இசை நிகழ்ச்சி, கும்மி என தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.