உலகின் சிறந்த ஓய்வு பெறும் பட்டியலில் மீண்டும் பினாங்கு முன்னணி

Admin
செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் பேசினார்.

 

 

ஜார்ச்டவுன்- 2021-ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் உலகின் சிறந்த 15 தீவுகள் பட்டியலில் ‘International Living Magazine’ எனும் நாளிதழ் பினாங்கு மாநிலத்தை தேர்வு செய்ததில் பெருமிதம் கொள்வதாக மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கூறுகினார்.

பினாங்கு மாநிலம் ஓய்வு பெறும் மற்றும் பிற அங்கீகாரங்களுக்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல. பினாங்கு அனைவருக்கும் பிடித்த ஓய்வு பெறும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டதில் தனது கருத்தை குறிப்பிடுமாறு நிருபர் கேட்ட கேள்விக்கு முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.

“பினாங்கு உணவு, கலாச்சாரம், தரமான வாழ்க்கை முறை, நல்ல மருத்துவ சேவைகள் மற்றும் மகிழ்ச்சியான மக்கள் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

“மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது வாழ்க்கைச் செலவினம் இங்கு மிகவும் குறைவாகும். வாழ்க்கை முறை; உணவு; பொது வசதிகள்  மற்றும் வானிலையும் பிற காரணிகளாக இடம்பெறுகின்றது.

“அந்த அங்கீகாரம் பெற்றதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, வாழ்க்கை முறை, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறந்த இடமாக பினாங்கை நிலைக்க வைத்திருப்பது நீண்ட கால செயல்முறையாகும். ”

முதல் இடத்தில் உள்ள மால்தாவிற்கு(Malta) அடுத்து ஓய்வுபெறும் முதல் 15 சிறந்த தீவுகளில் பினாங்கு மூன்றாவது இடத்திலும், இரண்டாவது இடத்தில்  மல்லோர்கா (ஸ்பெயின்) இடம்பெறுகிறது.

அவற்றைத் தொடர்ந்து அம்பெர்கிரிஸ் கேய் (பெலிஸ்), அயர்லாந்து, ரோட்டன் (ஹோண்டுராஸ்), இஸ்லா முஜெரெஸ் (மெக்ஸிகோ), இஸ்லா கோலன் (பனாமா), பாலி, கோ சாமுய் (தாய்லாந்து), லாஸ் டெர்ரெனாஸ் (டொமினிகன் குடியரசு), கிரீட் (கிரீஸ்), கோசுமேல் (மெக்ஸிகோ), கேய் கல்கர் (பெலிஸ்) மற்றும் ஃபூ குவோக் (வியட்நாம்) ஆகிய தீவுகள் தேர்வாகியுள்ளன.