‘கேட்’ மையம் வேலையற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டி- பேராசிரியர்.

Admin

பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் நிரந்தர வேலை இழப்பு மற்றும் சுய விருப்பித்தின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் வேலை மற்றும் திறன் வழிகாட்டியான ‘கேட்’ மையம் சிறந்த தீர்வாக அமைகிறது.

இந்த கேட் மையம் நிறுவன முதலாளிகளிடம் இருந்து பெறும் வேலை வாய்ப்பு கோரிக்கைக்கு ஏற்ப வேலை தேடுவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பொருத்தமான வேலை வழங்குகிறது.

மலேசியா புள்ளிவிவர துறை (டி.ஓ.எஸ்.எம்) நடத்திய தொழிலாளர் படை கணக்கெடுப்பில் பினாங்கில் வேலையின்மை விகிதம் 2020 முதல் காலாண்டில் 2.1 சதவீதத்திலிருந்து இரண்டாவது காலாண்டில் 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

கேட் மைய அகப்பக்கத்தில் வெளியிடப்படும் வேலை வாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களுக்கு வேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2009-ஆண்டு முதல் செயல்படும் இந்த கேட் மையம் முற்றிலும் இலவசமாக செயல்படுகிறது என
மனித மூலதன மேம்பாடு, கல்வி மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி
14-வது சட்டமன்ற கூட்டத்தொடரின் போது வழங்கிய தொகுப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கேட் மையம் சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் (சொக்சோ) இணைந்து வேலையற்றவர்களுக்கு
பயிற்சி, ஆலோசனை, ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் செயல்படுகிறது
என சுங்கை அச்சே மற்றும் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் பிறை சட்டமன்ற உறுப்பினருமான ப.இராமசாமி.

பினாங்கில் செயல்படும் அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரத்தை கேட் மைய அகப்பக்கத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என்ற பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற ஆலோசனையை வரவேற்கத்தக்கது.

பினாங்கு மாநில அரசு திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கில் தொழில்திறன் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் & கணிதம் என்ற STEM கல்வியில் முக்கியத்துவம் அளித்து வளர்ச்சி கண்டு வரும் பினாங்கு தொழிற்துறையின் தேவைக்கேற்ப மனித மூலதனத்தை உருவாக்க வித்திடுகிறது.

மனித மூலதனத்தை கல்வியின் வாயிலாக வலுப்படுத்த, மாநில அரசு மொத்தம் ரிம3.24 மில்லியனை 84 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கி ‘மேக்கர் லேப்’ ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இம்மாநிலத்தில் வாழும் இந்துக்களின் உரிமைகள் மற்றும் சமூகநலன்கள் பாதுகாப்பதில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சிறந்த பங்கையாற்றுகிறது.

அவ்வகையில், ஆலய உடைப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்ட தேவி ஸ்ரீ கருமாரியமன் கோயில், தேவி ஸ்ரீ ருத்ரா மகா காளியம்மன் தேவஸ்தானம் மற்றும் முனீஸ்வரர் ஐயா கோயில் ஆகிய கோவில்களுக்கு சட்டபூர்வமான நிலம் வழங்கியதையும் பேராசிரியர் எடுத்துரைத்தார். பினாங்கு தீவுப்பகுதியில் ‘இறப்பு தகானம் மையம்’ அமைக்க வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனையை செயல்படுத்த உத்தேசிக்கப்படும் என தொகுப்புரையில் கூறினார்.