‘கோவிட்-19 மாவட்ட பாதிப்புக் குறைப்பு திட்டம்’, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையிருந்து வெளியேற புதிய அணுகுமுறை – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – நம் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் இருந்து வெளியேற அல்லது விடுப்பட ‘கோவிட்-19 மாவட்ட பாதிப்புக் குறைப்பு திட்டம்’ அறிமுகம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து பசுமை மண்டலம் அடைந்த மாவட்டங்களை பாதுகாக்கவும் மற்றும் மஞ்சள் & சிவப்பு மாவட்டங்களை எதிர்த்து போராடும் நோக்கத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இதனை
மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் புத்ராஜெயாவில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் (எம்.கே.என்) சுகாதார அமைச்சு (எம்.ஓ.எச்) முன்வைத்த சில கருத்துகள் குறிப்பிடும் போது இவ்வாறு முகநூல் நேரலையில் பகிர்ந்துகொண்டார்.

இத்திட்டம் நான்கு முக்கிய கொள்கைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.அவை எல்லை கட்டுப்பாடு; நடமாட்டக் கட்டுபாடு, சமூக இடைவெளி மற்றும் சுய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகும்.

இந்த நான்கு கூறுகளும் மூன்று முக்கிய அம்சங்களான, முதலில் குடும்பத்தைப் பாதுகாத்தல்; சமூகத்தைப் பாதுகாத்தல் மற்றும் மாவட்டங்களைப் பாதுகாத்தல் (ஊராட்சி மன்ற அதிகாரிகளின் பொறுப்பு) என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மூன்று கொள்கைகளில் ஒன்றான
‘குடும்பத்தைப் பாதுகாத்தல்’ என்பது சுய சுகாதாரத்தைப் பேணுதல்; நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றுவது என்பது சுய சுகாதாரம் மற்றும் குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல்; மற்றும் மின்னியல் முறையில் பொருட்களை வாங்குவதும் கட்டணம் செலுத்துவதும் இந்த கோவிட்-19 சங்கிலியை முற்றாக அழிக்க உதவும் என முதல்வர் விளக்கமளித்தார்.

பச்சை மண்டலமாக நிலைநாட்டுவதற்கு ‘சமூகத்தைப் பாதுகாக்கும்’ அணுகுமுறை பின்வருமாறு:

(i) குடியிருப்புக் குழுக்கள்
சமூக நடவடிக்கைகள் நடைபெறாமல் இருப்பதை
உறுதிப்படுத்தல்.

(ii) சமூகத் தலைவர்கள் / காவல்துறையிடம் குழு நடவடிக்கைகள் குறித்து புகார் அளித்தல்

(iii) உள்ளூர் மக்கள்/ வருகையாளர்கள் நடவடிக்கைகள் குறிப்பாக உள்ளே வெளியே செல்வதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பதிவுசெய்தல்

(iv) கை சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல்

(v)கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார கல்வி எச்சரிக்கை வழங்குதல்

(vi)நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை குறித்த தகவல் பரப்புதல்

(vii) பச்சை மண்டலமாக நிலைத்திருக்க சமூகத்திற்கு விழிப்புணர்வு வழங்குதல் (வழக்கு பதிவு)

(viii) சந்தேகத்திற்குரிய கோவிட்-19 வழக்கை அதிகாரிகளிடம் தெரிவித்தல்

அதேசமயம், பச்சை மண்டலமாக நிலைநிறுத்த ‘மாவட்டம் பாதுகாப்பு’ இலக்கின் அணுகுமுறை கீழ்வருமாறு:

(i)மாவட்ட நடவடிக்கை கழகம் / ஊராட்சி மன்றங்களின் தலைமையில் செயல்படுதல்.

(ii)அதிகமாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் (பூர்வீக குடிமக்கள், மூத்த குடிமக்கள்) மீது கவனம் செலுத்துதல்.

(iii)அரசு சாரா இயக்கங்களான எம்.பி.கே.கே, ருக்கூன் தெத்தாங்கா, கொன்பி, கொஸ்பென் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல்.

(iv) எல்லைக் கட்டுப்பாட்டை அமல்படுத்துதல் மற்றும் வருகையாளர்களின் நுழைவை கண்காணித்தல்

(v) மாவட்டத் தகவல் துறை சுகாதார கல்வி மற்றும் பச்சை மண்டலமாக நிலைத்திருக்க ஊக்குவிக்க தகவல்கள் பரப்புதல்.

(vi)உள்ளூர் பச்சை மண்டலத்தை பராமரிக்க சமூகங்களுக்கு உந்துதல் மற்றும் ஊக்கங்கள் வழங்குதல்

பினாங்கில், இந்த தொற்றுநோயின் விளைவாக புதிய சூழ்நிலைகளுக்கு தீர்வு காண கொள்கை மாற்றங்கள் அல்லது புதிய திட்டங்களை செயல்படுத்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட தயார்நிலையில் இருப்பதாகவும் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு, மாநில அரசு நிர்வாகத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறை செயல்பாடுகள் அவசியம் என மாநில முதல்வர் பரிந்துரைத்தார்.

பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்தம் தலைமையில் செயல்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கோவிட்-19இல் பாதிக்கப்பட்ட வசதிக்குறைந்த தரப்பினருக்கு உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பினாங்கு மாநில காவல்துறையின் கணக்கெடுப்பின் படி கடந்த மூன்று பிரிவு நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை (நேற்று வரை) மீறிய 1,691 பேர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். எனினும், இதுவரை பினாங்கு மாநிலம் 97.88% நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை பின்பற்றியுள்ளது பாராட்டக்குரியதாகும்.

மேலும், பினாங்கு மாநில சுகாதாரத் துறை தலைவரின் அறிக்கையின்படி இம்மாநிலத்தில் முன் வரிசைப் பணியாளர்கள் யாவரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளாகவில்லை என மாநில முதல்வர் உறுதிப்படுத்தினார்.