தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் அன்பளிப்பு.

Admin

 

 

ஜாவி – தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கும் பொருட்டு ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய் இன்று அவரின் சேவை மையத்தில் அவ்வட்டாரத்தில் உள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

ஜாவி சட்டமன்ற உறுப்பினரை பிரதிநிதித்து அவரின் உதவி அதிகாரி காவ் ஹவ் தியோ மற்றும் சேவை மைய பணியாளரான லாவ் ஷி வேய் ஆகியோர் இப்பயிற்சி புத்தகங்களை எடுத்து வழங்கினர்.

சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி,  பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளியில் இருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு இப்பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். ஆறாம் ஆண்டு தேர்வுக்கானப் பிரதான பாடங்களான மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் தமிழ்மொழி பாடப் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது பாராட்டக்குரியதாகும்.

தமிழ்ப்பள்ளிகளில் இருந்து கடந்தாண்டு நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பத்தின் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவ்வட்டாரத்தில் வாழும் வசதிக்குறைந்த  பெற்றோர்களின் சுமையைக் குறைக்கவும், மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்க உதவும் வகையில் இப்பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுவதாக சேவை மைய பணியாளரான லாவ் ஷி வேய் குறிப்பிட்டார்.

சுமார் 610 பயிற்சி புத்தகங்கள்  ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மோய் லாய் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டது என்றால் மிகையாகாது.