தற்போது பினாங்கில் பி.கே.பி.டி-ஐ செயல்படுத்த அவசியமில்லை- மாநில முதல்வர்

பெனந்தி – பினாங்கில் கோவிட்-19 புதிய வழக்கு பதிவுகள் இடம்பெறுவதை தொடர்ந்து, பினாங்கு மாநில அரசு தற்போது கெடா மாநில மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி.கெ.பி.டி) அமலாக்கம் போல் செயல்படுத்த இணக்கம் கொள்ளவில்லை.

தென்மேற்கு மாவட்டத்தில் நேற்று பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு பதிலளித்தார்.

“இதுவரை, மாநில அரசு அப்பகுதியில் நிறைய வழக்குகள் பதிவாகாத காரணத்தால் அங்கு பி.கே.பி.டி. அமல்படுத்த அவசியமில்லை.

“தென்மேற்கு மாவட்டத்தில் ஒரு புதிய வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டதால் பி.கே.பி.டி அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.

“ஆகையால், மாநில சுகாதாரம் துறை தொடர்ந்து கோவிட்-19 குறித்த வழக்குகளை கண்காணிக்கும். ஏனெனில், ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் போது அவர்களின் நெருக்கமான தொடர்பு ; நோய்த்தொற்று ஏற்பட்டவர்களிப் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கு முன் அதுப் பரவாமல் தடுக்க பரிசோதனை செய்வார்கள், ” என ஜே.கே.கே.என் சிறப்பு பாதுகாப்பு தலைவருமான சாவ் கொன் யாவ் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

ஆகஸ்ட் 13 நிலவரப்படி, பினாங்கில் 126 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் 121 வழக்குகள் குணனடைந்தும்; ஒரு மரண எண்ணிக்கை மற்றும் ஐந்து வழக்குகள் இன்னும் சிகிச்சையில் உள்ளன.

தென் செபராங் பிறையில் ஒரு வழக்கு, தென்மேற்கு மாவட்டத்தில் ஒரு வழக்கு மற்றும் மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் மூன்று வழக்குகள் என மொத்தமாக ஐந்து வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநில அரசு இரண்டாம் மற்றும் மூன்றாம் கோவிட்-19 அலையை எதிர்க்கொள்ள தயாராக இல்லை. ஆகவே, பினாங்கு வாழ் மக்கள் சுகாதாரத் துறை நிர்ணயித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மாநில முதல்வர் கேட்டுக் கொண்டார்.

ஒரு மீட்டர் சமூக தூர இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைத்தூய்மி பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம் என மாநில முதல்வர் அறிவுறுத்தினார்