நாளை முதல் அங்கீகரிக்கப்பட்ட துறைகள் செயல்பட அனுமதி – மாநில முதல்வர்.

Admin

ஜார்ச்டவுன் – நாளை (13 மே 2020) தொடங்கி ‘பினாங்கு மீட்பு வியூகத் திட்டம்’ மூலம் மத்திய அரசு அங்கீகரித்த துறைகள் அனைத்தும் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தற்போது நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டு கட்டுபாட்டு ஆணையின் போது செயல்படும் என கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்தார்.

மத்திய அரசு நிராகரித்த துறைகள் செயல்பட அனுமதி இல்லை, தடை விதிக்கப்படாத நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி, மாநில ஆட்சிக்குழு & ஊராட்சி மன்றங்கள், சமூகப் பாதுகாப்பு அமைப்பு, மலேசிய கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரியம் (சி.ஐ.டி.பி); தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) மற்றும் பினாங்கு தேசிய பாதுகாப்புக் கழகம் (MKN) ஆகியவை பினாங்கு மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கட்டுமான மற்றும் தொழில்துறை ஊழியர்கள் பரிசோதனைக்கு மேற்கொள்ள வழிகாட்டியை ஆராய்ந்து வருகின்றனர்(இது விரைவில் அறிவிக்கப்படும்).

இதனிடையே, தாமான் பண்டாராயா, தாமான் மெட்ரோபோலிடன், தீவில் தாமான் போதானி, ‘விஷன் பார்க்’ எம்பாங்கான் அணைபந்தாய் கம்நூன், ஆயிர் ஈத்தாம் டாலாம் கற்றல் பூங்கா, செரோக் தோகூன், புக்கிட் பஞ்சூர், ஜூரு மலை வனப்பகுதி ஆகியவை மூடப்பட்டு உள்ளது. இதனுடன் விளையாட்டு வளாகம் அரங்கம், பொது மண்டபமும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மூடப்பட்டிருக்கும்.

தொடர்ந்து தொழுகை அல்லது வழிபாட்டு தளங்கள் திறப்புக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலை மாநில அரசு பின்பற்றும் என்றார். தற்போது விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது அடுக்குமாடி குடியிருப்புகளில் விருந்தினர்கள் 7 பேர் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மாநில முதல்வர் சாவ் அறிவுறுத்தினார்.

இதனிடையே, உணவகங்களில் கட்டம் கட்டமாக மட்டுமே உணவு உண்ன அனுமதிக்கப்படும். முதல் கட்டமாக (வருகின்ற 15 மே 2020 தொடங்கி) தங்கும்விடுதி, பேரங்காடி, ‘பிரன்சாய்ஸ்’ உணவகங்கள் செயல்படும்; இதற்கான வழிகாட்டுதலை நாளை பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் அறிவிக்கும். இதர உணவகங்கள் வளாகத்திலே உணவு சாப்பிட அனுமதி வழங்கப்படவில்லை.

பினாங்கு மாநில இயல்பான வியூகத் திட்டத்தில் “C.A.R.E “ எனும் அடிப்படையில் தொற்றுநோயை கட்டுப்படுத்தல், நிறுவனங்கள் புதிய இயல்பிற்கு ஏற்ப மாற்றியமைத்தல், சமூகத்தையும் பொருளாதாரத்தையும் காப்பாற்றுதல் மற்றும் சமூகத்தை வலுப்படுத்துதல் என நான்கு முக்கிய கொள்கைகளை ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் இன்று அறிவிப்புச் செய்தார்.

ஆகவே, ஒவ்வொரு ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநில துறை மற்றும் மாநில நிறுவனம் தங்கள் அடுத்த செயலை பினாங்கின் இயல்பான அடுத்த வியூகத்தின் “C.A.R.E.” அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை ஜுன் 9-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் தொடர்ந்து சுகாதாரம், முகக் கவசம் அணிதல், கைத்தூய்மி பயன்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில முதல்வர் சாவ் வேண்டுகோள் விடுத்தார்,