பாலிக் புலாவ் பகுதியில் கூடுதல் இணையச் சேவை மேம்படுத்தப்படும் 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, இம்மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக பாலிக் புலாவ் உட்பட கிராமப்புற பகுதிகளிலும் சீரான  தகவல் தொடர்பு சேவை பெறுவதை உறுதிசெய்ய இணக்கம் கொண்டுள்ளது. 

மாநில அரசு பாலிக் புலாவ் பகுதியின்  அதிக இடங்களில் ஒரு நிலையான பிராட்பேண்ட் இணைய வசதிகள் உருவாக்குவதைத் தவிர்த்து  புதிய தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது என உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹரி கூறினார். 

“இதுவரை, பாலிக் புலாவ் பகுதியில் மொத்தம் 973 வளாகங்கள் நிலையான  பிராட்பேண்ட் இணைய சேவை கொண்டுள்ளன. மேலும், உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய மொத்தம் 37 டிரான்ஸ்மிட்டர் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

“அது தவிர, பாலிக் புலாவ் பகுதியில் மொத்தம் 1,676 வளாகங்களில்  எதிர்காலத்தில் மொபைல் பிராட்பேண்ட் இணைய சேவை  இணைக்கப்படும்.

“தேசிய டிஜிட்டல் நெட்வொர்க் (JENDELA) மற்றும் பினாங்கு இணைப்பு பெருந்திட்டம் (பி.சி.எம்.பி) கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,” என 14வது சட்டமன்ற நான்காவது தவணை முதலாம் கூட்டத்தில்  வாய்மொழி கேள்விக்கு சாய்ரில் இவ்வாறு பதிலளித்தார்.

மாநில அரசு, அனைத்து பங்குதாரர்களுடன் ஒன்றிணைந்து தகவல் தொடர்பு சேவை வழங்குநர்கள் நிறுவனங்களின்  சேவையை மேம்படுத்த  செயல்படும் என்று ஜைரில் கூறினார்.

“சமூகத்தில் டிஜிட்டல் வளர்ச்சியின் இடைவெளியை  குறைப்பதற்கான முயற்சிகளை அதிகரிப்பது அவசியம். இது 

பொது இடங்களில் ரொக்கமற்ற பரிவர்த்தனை, வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் இல்லிருப்பு கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை (PdPR) போன்ற டிஜிட்டல் சேவை செயல்பாட்டுக்கு ஏற்ப அமையும்,” என்று அவர் மேலும் கூறினார்.