பினாங்கில் பி.டி.சி மூலோபாய திட்டம் மூலம் 1.31 பில்லியன் வருவாய் ஈட்டும் – முதலமைச்சர்

Admin
whatsapp image 2025 11 20 at 3.12.56 pm

ஜார்ச்டவுன் – தற்போதைய வேர்ல்ட் சிட்டி திட்டம் மற்றும் புதிய லீனியர் வாட்டர்ஃப்ரண்ட் மூலம் மாநில அரசின் நிதி நிலை வலுவடையும் என்றும், ரிம1.31 பில்லியன் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்கும் (பி.டி.சி) மாநில அரசுக்கும் இடையிலான இன்றைய கூட்டு முயற்சிக்கு குயின்ஸ்பே கடற்கரையில் உள்ள மீட்புத் திட்டங்கள், ஒரு தெளிவான எடுத்துக்காட்டு என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் வலியுறுத்தினார்.

“பினாங்கின் சமூக-பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிடுவதிலும், முன்னெடுப்பதிலும் மாநில அரசுடன் இணைந்து பி.டி.சி தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது.

“இந்த ஒத்துழைப்பு தரமான முதலீடுகளை ஈர்ப்பதில், மூலோபாய பகுதிகளை மேம்படுத்துவதிலும், அதே நேரத்தில் மாநிலத்திற்கு வருவாயை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது,” என்று 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவனையின் இரண்டாவது கூட்டத்தில் தனது தொகுப்புரையை வழங்கும் போது இவ்வாறு கூறினார்.

இதனிடையே, நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், இரண்டு முக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சொத்து மதிப்புகளை உயர்த்தி, குயின்ஸ்பே கடற்கரையினைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் மேம்பாட்டையும் உறுதி செய்யும் என்று கூறினார்.

2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு வருவாய் நிலுவைத் தொகை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்தும் கொன் இயோவ் விளக்கமளித்தார்.

கருவூல சுற்றறிக்கை WP10.6 பெறத்தக்க கணக்குகள் (ABT) என்பது, நிர்வாகத்தின் அடிப்படையில், ‘கடந்த கால நிகழ்வுகளிலிருந்து அரசாங்கத்தால் பெறப்பட வேண்டிய இருந்தாலும் பெறப்படாத தொகை’ என வரையறுக்கப்படுவதாக கொன் இயோவ் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில், மாநில அரசின் வரவு செலவுத் தொகை ரிம315.80 மில்லியனாக இருந்தது, இது 2023 ஆம் ஆண்டின் ரிம94.65 மில்லியனுடன் ஒப்பிடும்போது ரிம221.15 மில்லியனாக (233.4 சதவீதம்) அதிகரித்துள்ளது, என்றார்.

“மாநில அரசு வருவாய் நிலுவைத் தொகையில் இந்த அதிகரிப்பு ஏற்படுவதற்காகக் காரணம் 2024 ஆம் ஆண்டு தொடங்கி, ABT அறிக்கையிடலில் நிலக் கட்டணமும் வருவாய்க் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

“இந்த ABT-யின் பெரும்பகுதி ரிம71.58 மில்லியன் (நில வரி), ரிம203.44 மில்லியன் (நிலக் கட்டணம்) மற்றும் பினாங்கு வீட்டுவசதி வாரியத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள வாடகை மற்றும் வீட்டு பராமரிப்பு கட்டணங்கள் ரிம17.77 மில்லியன் ஆகும்.

“2024 ஆம் ஆண்டிற்கான ABT நிலுவைத் தொகை ரிம274.80 மில்லியன் ஆகும்” என்று அவர் விளக்கமளித்தார்.

தேசிய தணிக்கைத் துறை, மாநில நிதித் துறை, பினாங்கு மாநில நிலம் & சுரங்க அலுவலகம் மற்றும் ஐந்து மாவட்ட மற்றும் நில அலுவலகங்கள் உடனான கலந்துரையாடல்கள், ஒப்பந்தங்களின் அடிப்படையில் ABT அறிக்கையில் நிலக் கட்டணம் சலுகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதன் காரணமாக 2024-ஆம் ஆண்டுக்கான ABT அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த நில கட்டணம் ABT மொத்த தொகையில் 64 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது.
எனினும், நிலக் கட்டணம் ABT ஆகக் காண்பிக்கும் அறிக்கை முறையை மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, மாநில அரசு நிலக் கட்டணம் வருவாயின் அங்கீகார தொடக்கப் புள்ளியாக கொள்கையை வெளியிட்டுள்ளது. நிலக் கட்டணம் வழங்கப்படுவது அதன் மதிப்பு மற்றும் பெறப்படும் காலம் தொடர்பான முடிவுகள் (புதுப்பிப்புகள், விலக்குகள், ரத்து செய்தல் அல்லது மாற்றுதல்) காரணமாக ஏற்பட்ட உறுதிப்படுத்தப்படாத தன்மையால் ABT ஆகக் காணப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.