பினாங்கில் 70% நிரந்தர வன இருப்புகள் நீர்ப்பிடிப்பு தளமாக அரசிதழ் பதிவு செய்யப்படும் – முதல்வர்

ஜார்ச்டவுன்-பினாங்கு மாநில அரசு 2004 -ஆம் ஆண்டு முதல் 3,565 ஹெக்டேர் அல்லது நிரந்தர வன இருப்புகளில் 70 சதவீதத்தை நீர் நீர்ப்பிடிப்பு பகுதியாக அரசிதழ் பதிவு செய்துள்ளது.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறுகையில், பிற மாநிலங்களைக் காட்டிலும் பினாங்கில் தான் முதன்மையாக
மாநில நீர் வழங்கல் (இ.பி.ஏ) 1998 சட்டத்தின் கீழ் நிரந்தர வன இருப்புப் பகுதியை அரசிதழ் பதிவு செய்யப்பட்டது.

“2019, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற 75-வது தேசிய நில கவுன்சில் (எம்.டி.என்) கூட்டத்தில் தேசிய வனவியல் சட்டத்தின்(1988) கீழ் நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் அரசிதழ் பதிவு செய்வது தொடர்பான பிரச்சினைகள் மீண்டும் எழுப்பப்பட்டன.

“எனவே, இந்த விவகாரம் தொடர்பாக 2019 செப்டம்பர், 30-ஆம் நாள் எனது தலைமையில் சிறப்பு சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பினாங்கு மாநில வனவியல் துறை, புக்கிட் பெண்டேரா பகுதி உட்பட தொடர்புடைய அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டது.

“இந்த விவகாரம் தொடர்பாக இந்த ஆண்டு டிசம்பர்,2-ஆம் நாள் ஆட்சிக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 1984 தேசிய வனவியல் சட்டத்தின் கீழ் நிரந்தர வன இருப்பை நீர்ப்பிடிப்பு வனமாக அரசிதழ் பதிவு செய்வதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை.

“மாநில அரசு 3,790.54 ஹெக்டேர் நிரந்தர பாதுகாப்பு வனத்தை10 (1) (இ) பிரிவு சட்டத்தின் கீழ் நீர் பிடிப்பு வனமாக அரசிதழ் பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

“2004-ஆம் ஆண்டு இ.பி.ஏ 1988 கீழ் அரசிதழ் பதிவு செய்யப்படாத பிற நிரந்தர வன இருப்புக்களும் உட்பட இந்த எண்ணிக்கையில் ஐந்து சதவிகிதம் அதிகரிப்பதைக் காட்டுகிறது,” என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தின் சிறிதளவு நீர் பிடிப்புப் பகுதியைக் கூட பினாங்கு இன்னும் அரசிதழ் பதிவு செய்யவில்லை என்று மக்களவையில் சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் கூறியதற்கு முதல்வர் கொன் யாவ் இவ்வாறு பதிலளித்தார் .

இந்தக் கூட்டத்தில் சுற்றுலா மற்றும் புத்தாக்க, ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின் மற்றும் பினாங்கு மாநில வனத்துறை இயக்குநர் முஹம்மது எஷார் யூசோப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த கொன் யாவ், பினாங்கு மாநில வனவியல் துறை தற்போது வர்த்தமானி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 2021,ஜூன் மாதத்தில் அரசிதழ் பதிவு முழுமைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தற்போது வெவ்வேறு சட்டத்தின் கீழ் அரசிதழ் பதிவு செய்வது தான் பிரச்சனையாக எழுகிறது. இது இரு சட்டங்களாக வேறுப்பட்டாலும் ஒரே நோக்கத்தையே கொண்டுள்ளன.இதன் மூலம் நீர் விநியோகத்தை உறுதிச் செய்வதற்காக நீர்ப்பிடிப்பு பகுதிகளை உருவாக்கி பராமரிப்பதாகும்,” என்றார்.

பினாங்கில், நீர்ப்பிடிப்பு பகுதிகளை அரசிதழ் பதிவு
செய்வதை விடுத்து, நிரந்தர வன இருப்புக்களில் அனுமதியின்றி மரம் வெட்டுவதை அனுமதிக்காது.

“கடைசியாக மரம் வெட்டும் நடவடிக்கைகள் 1972-ல் செயல்படுத்தப்பட்டன. பினாங்கு மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்துகிறது என்பதை சித்தரிக்கிறது,” என கூறினார்.