பினாங்கு காற்பந்து சங்க விருதளிப்பு விழா 2018

Admin
பினாங்கு இந்திய காற்பந்து சங்க உயரிய விருதுகள் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்

பினாங்கு இந்திய காற்பந்து சங்க (பிபா) ஏற்பாட்டில் முதல் முறையாக கால்பந்து வீரர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய காற்பந்து விருதளிப்பு விழா இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் காற்பந்து வீரர்கள் மட்டுமின்றி காற்பந்து துறையின் மேம்பாட்டுக்கு ஊன்றுகோளாக திகழும் நல்லுள்ளங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


பினாங்கு காற்பந்து துறையை மேன்மையடைய நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு நல்கிய பல விதமான சமூக பின்னணியைக் கொண்டவர்களுக்கும் சிறப்பு விருதுக்கான பிரிவில் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும், சிறந்த காற்பந்து சங்கம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் இணையத்தள வாயிலாக 300-க்கும் மேற்பட்ட பினாங்கு கால்பந்து ஆதரவாளர்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிற காற்பந்து சங்கங்களை ஊக்கப்படுத்துவதோடு அதன் நிர்வாகம். இரசிகர் மன்றம், விளம்பரம். மற்றும் அகப்பக்க மேம்பாடு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்என பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத் தலைவர் திரு ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

பிபா சங்கம் விளையாட்டுத் துறை மட்டுமின்றி சமூகத்தைச் சார்ந்த பல நடவடிக்கைகளும் ஏற்று நடத்துகின்றனர்.

ஒலிப்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த முன்னாள் காற்பந்து விளையாட்டு வீரர் திரு கிருஷ்ணசாமிக்கு ரிம500 சன்மானமாக வழாங்கப்பட்டது. 11 வயது நிரம்பிய நிக்லேஸ்வரா ஸ்குவாஷ் போட்டியின் சாதனை நட்சத்திரமாக திகழ்வதால் ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் ரிம1,000 சன்மானமாக கொடுக்கப்பட்டது.

ஸ்குவாஷ் போட்டி வீரர் நிக்லேஸ்வரா

நிக்லேஸ்வரா கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்கோட்டிஸ் திறந்த போட்டியில் வெற்றி மகுடம் சூடிய வேளையில் பிரிட்டிஷ் திறந்த போட்டியில் 4-வது இடத்தை கைப்பற்றினார்.