சமூகநலத் திட்டங்கள் பினாங்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

Admin

பினாங்கு மாநில அரசு 2008-ஆம் ஆண்டு ஆட்சிப்பீடத்தில் கால் தடம் பதித்த நாள் முதல் பொது மக்களின் சமூகநலன் காக்கும் பொருட்டு பல சமூகநலத்திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக மாநில சமூகநலன், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான பீ புன் போ முத்துச்செய்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்தின் இணையுடன் பல சமூகநலத் திட்டங்கள் 2009-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது, அதில் தனித்து வாழும் தாய்மாது, உடல் ஊனமுற்றோர், தங்கக் குழுந்தை மற்றும் தங்க மாணவர் திட்டம் இடம்பெறுகின்றன .

மேலும் மாநில அரசாங்கம் மூத்தகுடிமக்களின் சேவையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான வரவுச்செலவுத் திட்டத்தில் ரிம 100 இருந்து ரிம130-ஆக உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தங்கத் திட்டங்கள் அறிமுகத்தின் மூலம் மாநில அரசு ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வித்திடுகிறது. அதுமட்டுமின்றி தனித்து வாழும் தாய்மாது மற்றும் மூத்தகுடிமக்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தாமல் அங்கீகரிக்கப்படுகின்றனர்.

அதேவேளையில் மாநில அரசு எதிர்லாகத்தில் தொழிற்துறை புரட்சி 4.0 வெற்றிநடை போடும் பொருட்டு பினாங்கு வாழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பல தங்கத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் ஒன்றாம் மற்றும் நான்காம் படிவம் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக ரிம100 கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு ரிம1000 சன்மானமாக வழங்கப்படும் என கூறினார் .