பினாங்கு காவல்துறை தலைவர் மாநில முதல்வர் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை

rptoz

ஜார்ச்டவுன் – கடந்த ஓர் ஆண்டு ஆறு மாதங்களாக பினாங்கு காவல்துறையில் முழு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய காவல்துறைத் தலைவர் டத்தோ நரேனசகரன் வருகின்ற மார்ச் மாதம் 3-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வுப்பெறுகிறார்.

ஓய்வுப் பெறுவதற்கு முன்பு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு மரியாதை நிதித்தம் வருகை மேற்கொண்டனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு நீடித்த மாநில முதல்வருடனான கலந்துரையாடலில் டத்தோ நரேனசகரனின் பதிவிக் காலத்தில் மாநில அரசாங்கத்திடம் பெற்ற அனைத்து ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கும் நன்றிக் கூறினார்.

“மாநில அரசு நல்கிய அனைத்து ஆதரவுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன். பினாங்கில் கடமையாற்றிய இந்த குறுகிய காலத்தில் அதிகமான நண்பர்கள் கிடைத்தனர்,” என அகம் மகிழக் கூறினார்.

பினாங்கு காவல்படையை வலுப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முன்னொடியாகத் திகழ்ந்தற்கு மாநில முதல்வர் நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் இறுதியில் நரேனசகரன் மாநில முதல்வருக்கு நினைவுச்சின்னம் எடுத்து வழங்கினார்.

கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி மாநில காவல்துறைத் தலைவராக வருவதற்கு முன்பு, நரேனசகரன் புக்கிட் அமான் மேலாண்மைத் துறை (பயிற்சி) துணை இயக்குநராகப் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.