பினாங்கு மாநிலம் 2025 மார்ச்,31 வரை ரிம65.3 மில்லியன் அதிக வருவாய் பதிவு – முதலமைச்சர்

Admin
a58e8423 da5d 4647 8b8e dbc55d7da9a3

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச்,31 வரை, ரிம268,463,025.36 மதிக்க தக்க வருமானத்தைப் பதிவு செய்துள்ளது மற்றும் ரிம203,189,122.16 என்ற செலவினங்களுடன் ரிம65,273,903.20 எனும் அதிகப்படியான வருவாயை பதிவு செய்துள்ளது.
மாநில முதலமைச்சர், மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநில சட்டமன்றத்தின் 15வது கூட்டத்தின் மூன்றாம் தவணையின் முதல் அமர்வில், வாய்மொழி கேள்வி-பதில் அமர்வில் மே,18 அன்று தெரிவித்துள்ளார்.

மேலும், நிதி, பொருளாதார மேம்பாட்டு மற்றும் நிலங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், கடந்த ஆண்டின் இறுதியில் ரிம174.09 மில்லியன் நிதி குறைபாடு குறித்து விளக்கமளித்தார், இது 2023 ஆம் ஆண்டை விட குறைவாக உள்ளது (ரிம358.80 மில்லியன்).

“இந்த குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் ரிம810.46 மில்லியன் வருமானத்தைக் காட்டிலும் நிர்வாக செலவினம் ரிம719.55 மில்லியன் மற்றும் மேம்பாட்டு நிதி வாரியத்திற்கு (Kumpulan Wang Pembangunan) ரிம265 மில்லியன் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
“மாநில அரசு, மத்திய அரசிடமிருந்து ரிம100 மில்லியன் முன்பணம் பெற்றுள்ளது, இது ஒருங்கிணைக்கப்பட்ட அமானா கணக்கில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது, அதில் முக்கிய காரணிகளில் ஒன்று பணப்புழக்க ஓட்டத்தை நிர்வகித்தல் ஆகும்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் அய்க் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, கொன் இயோவ், 2024ஆம் ஆண்டுக்கான (இன்னும் கணக்காய்வு செய்யப்படாத) மாநில அரசின் நிதி அறிக்கை, ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக் கணக்கின் நிலைமையை ரிம1,384.74 மில்லியனாகக் காட்டுவதாகத் தெரிவித்தார். இது 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரிம1,466.04 மில்லியனைவிட குறைவாகும். இதில், ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் கணக்காக ரிம155.94 மில்லியனும், ஒருங்கிணைக்கப்பட்ட அமானா கணக்காக ரிம1,228.89 மில்லியனும் அடங்கும்.

அவர் மேலும் கூறியபோது, ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் கணக்கு 2023 ஐவிட ரிம174.09 மில்லியன் குறைந்துள்ளது, அதேவேளையில், ஒருங்கிணைக்கப்பட்ட அமானா கணக்கு (Akaun Amanah Disatukan) 2023ஆம் ஆண்டை விட ரிம92.79 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.