பிள்ளைகளுக்கு சுகாதாரமான வாழ்க்கமுறையை சிறு வயது முதல் கற்று கொடுக்க வேண்டும்

Admin

 

பாயான் பாரு – “ சிறு வயது முதல் நமது பிள்ளைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவம் கூறுவதோடு அதனைப் பின்பற்றும் வழிமுறைகளும் கற்றுக்கொடுக்க வேண்டும்.  ஆரோக்கியம் கொண்டவர் செல்வந்தராகக் கருதப்படுவர். மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்த பினாங்கு 2030 இலக்கு அடையும் பொருட்டு திறன்மிக்க நகரம் உருவாக்குவதற்கு அடிப்படையில் பொது மக்கள் சுகாதரமாக வாழ வேண்டும். இதன் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு மாநிலத்ர்தின் முன்னேற்றத்தை நிலைநாட்டலாம்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஹஜி அப்துல் ஹலிம்‘ உலக சுகாதார தினம் 2019’-ஐ அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.


    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பினாங்கு அட்வெந்திஸ் மருத்துவமனை  ஏற்பாட்டில் அட்வெந்திஸ் சமூக சேவை மற்றும் அட்வெந்திஸ் மருத்துவப் பணி இணை ஒத்துழைப்புடன் சுகாதார முகாம் சொங் செங் சீனப்பள்ளி மண்டபம், பாயான் பாருவில் இனிதே நடைபெற்றது.

    இந்த முகாமில் பொது மக்களுக்கு இலவசமாக சுகாதார பரிசோதனை நடத்தப்பட்டன.  இதில் மன அழுத்தப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, உடல் எடை குறியீடு, உடல் பருமல் பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பல இடம்பெற்றன.

    வருங்காலத்தில் தொடர்ந்து பத்து மாவுங் சட்டமன்ற தொகுதியில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் நடத்த இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான  டத்தோ ஹஜி அப்துல் ஹலிம் ஆதரவு நல்குவதாக உறுதியளித்தார்.

    இந்த முகாமில்  பினாங்கு அட்வெந்திஸ் மருத்துவமனை  உடல் எடை குறைப்புக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டத்  திட்டம் துவக்க விழாக் கண்டது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 3 மாதங்களில் உடல் எடை குறைக்க இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது .

    மேலும், இந்த முகாமில் ‘Mega Heart’ கண்காட்சி, உடல் கொழுப்பு குறைப்பு உடற்பயிற்சி, சுகாதார பிரச்சாரம் மற்றும் இரத்த தானம் நடைபெற்றன.

         பினாங்கு மாநிலம் மருத்துவ சுற்றுலாவுக்கு   புகழ்பெற்று விளங்கினாலும் பொது மக்கள் சுகாதாரமான வாழ்க்கைமுறை அமல்படுத்த முற்பட வேண்டும்.இதன்  மூலம் நோய் நொடியிலிருந்து தற்காத்து கொள்ள முடியும் என

உள்நாட்டு மற்றும் அனைத்துலக வர்த்தகம், பயனீட்டாளர் விவரம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஹஜி அப்துல் ஹலிம் கூறினார்