பி.டி.சி பைராம் தோட்ட 145 ஏக்கர் நிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை அமைக்கும் – முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) தென் செபராங் பிறை மாவட்டத்திற்கு அருகிலுள்ள பைராம் தோட்டத்தில் 145 ஏக்கர் நில மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நோக்கம் எதிர்காலத்தில் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்துறை பகுதி மற்றும் பிற பொது மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்குவதாகும்.

நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் யாவ், இத்திட்டத்தின் முதல் கட்டம் ஜூன்,15 அன்று தொடங்கப்பட்டது என்றார். இத்திட்டம் முடிவடைய 18 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த கட்டத்தில், பைராம் தோட்ட பகுதியில் மேம்படுத்த பொது மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தொழில்துறைகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

“பைராம் தோட்ட நிலத்தை மீட்புப்பணி திட்டமானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்வதாகும்” என்று இன்று ஶ்ரீ பினாங்கு அரங்கத்தில் 14-ஆவது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவனை இரண்டாவது கூட்டத்தில் வாய்வழி கேள்வி பதில் அமர்வில் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

முன்னதாக, ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லைய், பினாங்கு மேம்பாட்டு கழகம் பைராம் தோட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

பைரம் தோட்டத்தில் முன்மொழியப்பட்ட நிலப்பரப்பு திட்டம் ஏழு கட்டங்களை உள்ளடக்கியது என்று மாநில முதல்வர் விவரித்தார்.
இருப்பினும், அவர் மேலும் கூறுகையில், இது வரை முதல் கட்டம் மட்டுமே அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
“இந்த நிலையில், 145 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய முதல் கட்டம் நில மறுசீரமைப்பு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது, ”என்று மாநில முதல்வர் சாவ் ஜாவி சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்