மாநில அரசு ஓர் ஆண்டில் பத்து உபான் தொகுதி பொது வசதியை மேம்படுத்த ரிம1.65 மில்லியன் நிதி ஒதுக்கீடு – குமரேசன்

Admin
புதுப்பிக்கப்பட்ட தாமான் பெக்காகா எஸ்பிபிகே அடுக்குமாடி கூரைகள்
சட்டமன்ற உறுப்பினர் குமரேசன்

பத்து உபான் தாமான் பெக்காகா எஸ்பிபிகே அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிக்கப்படாத நிலையில் இருந்த கூரைகள் புதுப்பிப்பதற்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் உதவிக்கரம் நல்கினார். இந்த குடியிருப்பில் கடந்த 20 ஆண்டுகளாக கூரைகள் பராமரிக்கப்படாத நிலையில் இருந்ததாக அறியப்படுகிறது.

இந்த பராமரிப்புப் பணி மேற்கொள்ள தேவைப்பட்ட ரிம187,000 செலவில் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் பினாங்கின் 80 சதவீதம் அதிகப்பட்ச பராமரிப்பு நிதியம் (TPM80PP) மூலம் 80 விழுக்காடு பராமரிப்புக்கான நிதியுதவி பெற்றுக்கொடுத்தார். இந்நிதியின் 80 விழுக்காடு தொகையை மாநில அரசு ஏற்கும் வேளையில் குடியிருப்பாளர்கள் 20 விழுக்காடு நிதிச் செலுத்த வேண்டும். இருப்பினும் நான்கு அடுக்குமாடியைக் கொண்ட அக்குடியிருப்பில் அதிகமான பி40 குழுவைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அக்குடியிருப்பு மக்களின் நிதிச்சுமைக் குறைக்கும் பொருட்டு சட்டமன்ற உறுப்பினர் 10 விழுக்காட்டுக்கான (ரிம1,870) நிதியை வழங்கினார்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் வழிக்காட்டலில்

கடந்த ஆண்டு மே முதல் ஜூன் மாதம் வரை ஓர் ஆண்டு கால வரையறையில் பொது வசதி மேம்பாடு மற்றும் பராமரிப்புத் திட்டங்களுக்காக மாநில அரசாங்கத்தின் துணையுடன் ரிம1.65மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

நான் மாநகர் கழக உறுப்பினராக இருக்கும் வேளையில் இந்த இடத்திற்கு வருகையளித்து கால்வாய்கள் பராமரிக்க உதவினேன். எனவே, சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டப் பிறகு இவ்வட்டார மக்களுக்கு உதவும் வகையில் மக்களுடனான சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டு இந்த பராமரிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது,”என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.

தாமான் பெக்காகா எஸ்பிபிகே அடுக்குமாடி குடியிருப்பாளர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் கூரைகள் பராமரிப்புத் திட்டமும் அந்த அடுக்குமாடி கட்டடம் சாயம் பூசும் திட்டமும் முன்மொழியப்பட்டது.

அக்குடியிருப்பு மக்கள் மழை காலங்களில் குறிப்பாக மேல் மாடியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் கசிவு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர். எனவே, தொடக்கமாக கூரைகள் பராமரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது என மேலும் தெரிவித்தார்.