மாநில முதல்வரின் 60-வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

ஜோர்ச்டவுன் – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவர்களின் 60-வது பிறந்தநாள் முதல்வர் அலுவலக ஊழியர்களுடன்  கொண்டாடப்பட்டது

முதல்வருக்கு பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை என அறிந்த அலுவலக ஊழியர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் தேநீர் விருந்தோம்பலில் மிகவும் சாதாரணமாக அனிச்சல் வெட்டிக் கொண்டாடினர்.

60 வயது நிரம்பிய முதல்வர் வாழ்க்கையில் மேன்மை நிலை அடைவதோடு தொடர்ந்து பினாங்கு மாநில வளர்ச்சிக்கு உழைக்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசு ஊழியர்கள், நிருபர்கள் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடி மகிழ்ந்தனர்.