ஆலய நிர்வாகத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்

Admin
fb img 1791776728060

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) கீழ் இயங்கும் அனைத்து ஆலயங்களையும் சிறப்பாக நிர்வகித்து, சமயப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, இந்து சமூகத்திற்கு சேவையாற்றி வரும் ஆலய நிர்வாகிகளின் அர்ப்பணிப்பும் சேவையும் பாராட்டுக்குரியது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

2026 அக்டோபர்,1 முதல் 2027 செப்டம்பர்,30 வரையிலான பதவிக்காலத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆலயத் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

fb img 1791776760871

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் தலைமையில், 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வில் முதல்முறையாக எந்தவித திருத்தங்களும் இன்றி சுத்தமான கணக்காய்வு சான்றிதழைப் பெற்றுள்ளதாக லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தச் சாதனைக்கு ஆலய நிர்வாக குழுவினரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் முக்கியப் பங்காற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
fb img 1791776743257

புதிதாக நியமிக்கப்பட்ட ஆலயத் தலைவர்களாக, தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், ஸ்ரீ கணேசர், ஸ்ரீ ஐயப்பன் மற்றும் ஸ்ரீ நாகநாதர் ஆலயம், குமாரத்திரவியம் காசிநாதன்; குயின் ஸ்ரிட்,
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஆர். அரசு; சோலோக் யோர்க்
ஸ்ரீ ராமர் ஆலயம், டத்தோ வில்லந்தரன் கோவிந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தோக்கோங் லேன்
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், வி.எல். கணேசன்; ஸ்ரீ குஞ்ச் பிஹாரி ஆலயம், ஆர். அனில் சர்மா; ஜாலான் ஃபெட்டிஸ், ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கணேசன் இராமசாமி ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகான் அஜாம், தேவி ஸ்ரீ வீரபத்திர மகா காளியம்மன் ஆலயம், அன்பழகன் மணி;
நிபோங் திபால், தேவி ஸ்ரீ அன்னை திரௌபதி அம்மன் ஆலயம், சுப்பிரமணியம் தங்கவேலு; புக்கிட் தெங்கா, ஸ்ரீ மங்களநாயகி அம்மன் ஆலயம், விஸ்வநாதன் தில்லைச்சிதம்பரம் ஆகியோரும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் ஒற்றுமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் இணைந்து செயல்பட்டு, ஆலயங்களின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், இந்து சமூகத்தின் தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து ஆலயத் தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் மீண்டும் வாழ்த்து தெரிவித்த அவர், அவர்களின் பதவிக்காலம் அர்த்தமிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைய வாழ்த்தினார்.