எம்.பி.எஸ்.பி, சித்தாடைன்ஸ் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகளைச் செயல்படுத்த இணக்கம்

Admin
whatsapp image 2025 07 10 at 15.12.06 (1)

 

பெராபிட் – சித்தாடைன்ஸ் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகியவை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் சமூகப் பாதுகாப்பு முயற்சிகளை வெற்றியடையச் செய்ய ஒரு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன.

நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் தனியார், பொது மற்றும் சமூகத் துறைகளுக்கு இடையிலான கூட்டாண்மைகளின் உண்மையான மதிப்பை இந்த ஒத்துழைப்பு பிரதிபலிக்கிறது என்று எம்.பி.எஸ்.பி செயலாளர் முகமட் இப்ராஹிம் முகமட் நோர் கூறினார்.

“இத்திட்டம் இரண்டு முக்கிய இடங்களை, அதாவது புக்கிட் டி.ஓ பொழுதுபோக்கு பூங்கா மற்றும் செரி அகாசியா பூங்கா, மத்திய செபராங் பிறை ஆகிய இடங்களை உள்ளடக்கியது.

“புக்கிட் டி.ஓ-வில், பொது உள்கட்டமைப்பை சரிச்செய்யும் முயற்சிகளில் பிரதான படிக்கட்டுக்கு மீண்டும் வண்ணம் தீட்டுதல், நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவுதல் மற்றும் பசுமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக பனை மற்றும் பாக்கு மரங்களை நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

“இதற்கிடையில், தாமான் ஶ்ரீ அகாசியாவில், பனை மற்றும் பாக்கு மரங்கள் நடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

 

“இந்த மரங்களை நடுவது பினாங்கு மாநிலத்தின் அடையாளமாக மட்டும் விளங்காமல், இது வரலாற்று பாரம்பரியம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியின் மையமான சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் மதிப்பையும் நிலைநிறுத்துகிறது.”

“உண்மையில், இந்த முயற்சி பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது ,” என்று அவர் இன்று காலை புக்கிட் டி.ஓ- வில் உள்ள PBAPP பொழுதுபோக்கு பூங்காவிற்கு அருகில் 7P’s (மக்கள், பொது, தனியார், அறிவு, அறிவியல், கூட்டாண்மை) திட்டத்தை நிறைவேற்றும்போது கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சித்தாடைன்ஸ் பொது மேலாளர் லீ பூன் கே; எம்.பி.எஸ்.பி கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.எஸ்.பி துறைகளின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

மேலும் கருத்து தெரிவித்த முகமட் இப்ராஹிம், மக்கள், பொதுமக்கள், தனியார் துறை, தொண்டு நடவடிக்கைகள், அறிவு மற்றும் அறிவியல், பூமியின் நிலைத்தன்மை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 7P இன் அணுகுமுறை இன்றும் எதிர்காலத்திலும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் சரியான சூத்திரமாகும், என்றார்.

“எனவே, மனிதர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் பாரம்பரியத்திற்கும் விரிவான ஒரு சி.எஸ்.ஆர் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சித்தாடைன்ஸ் நிறுவனத்தை முன்மாதிரியாகக் கொண்டு பிற நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

“எனவே, செபராங் பிறையை ஒரு முற்போக்கான, மீள்தன்மை கொண்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்றுவதில் ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு தரப்பினருக்கும் எம்.பி.எஸ்.பி எப்போதும் அதன் கதவுகளைத் திறக்கிறது.”

whatsapp image 2025 07 10 at 15.12.08

“எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பசுமை முயற்சிகளுக்கு இன்றைய திட்டம் ஒரு ஊந்துகோளாக அமையும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.