கம்போங் மானிஸ் மறு மேம்பாட்டு திட்டம் கூடிய விரைவில் செயல்பாடுக் காணும்

Admin

ஜார்ச்டவுன் – கம்போங் மானிஸில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு ஒரு வசதியான மற்றும் சிறந்த வீட்டை வழங்கும் திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும்.

கம்போங் மானிஸ் நில உரிமையாளர், ரயில்வே சொத்துடமை கார்ப்பரேஷன் (ஆர்.ஏ.சி) மற்றும் பினாங்கு வீட்டுவசதி வாரியம் (எல்.பி.என்.பி.பி) இரண்டு வாரங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் நிலத்தில் மறு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்

“40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட
இக்குடிமக்களின் குடியேற்றப் பிரச்சனை இன்று வரை அப்படியே இருந்தது. அது அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கை நிலைமையை அடிப்படையில் இன்னும் மோசமாகிவிட்டது.

“மேலும் டத்தோஸ்ரீ சுந்தராஜூ முயற்சியால், இந்தக் குடும்பங்களின் அவலநிலை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அடுத்த இரண்டு வாரங்களில், RAC, LPNPP உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்த நிலத்தை கூட்டாக மீண்டும் மேம்பாடு செய்ய ஏற்பாடு செய்கிறோம்.

“ஐந்து மேம்பாட்டாளர்கள் முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) சமர்ப்பித்துள்ளனர், மேலும் வரும் வாரங்களில் நாங்கள் கூடுதல் தகவல்களை வழங்க இணக்கம் கொள்கிறோம்.

“இந்த மறு மேம்பாட்டுத் திட்டம் இறுதியாக தொடங்கும் போது, ​​இங்குள்ள குடிமக்கள் இறுதியாக வசதியான, வாழக்கூடிய மற்றும் வாழ்வதற்கு உகந்த ஒரு வீட்டைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

“வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக டத்தோஸ்ரீ சுந்தராஜூவின் நியமனம் சரியான நேரத்தில் அமைந்தது என்று நான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கடந்த மாநிலத் தேர்தலின் முடிவில் நான் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டப்போது, ​​நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்குள் சொன்னேன். இந்த நீண்டகாலப் பிரச்சனையை (கம்போங் மானிஸ்) தீர்க்க வேண்டும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் சாவ் கூறினார்.

நான்கு குழந்தைகளுடன் தொடக்கப்பட்ட, ஷான் குழந்தைகள் காப்பகம் இப்போது 43 குழந்தைகள் (23 சிறுவர்கள் மற்றும் 20 பெண்கள்) தங்கும் அளவிற்கு மேம்பாடுக் கண்டுள்ளது.

அண்மையில், உலகையே தாக்கிய கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்ட போதிலும், காப்பகத்தில் உள்ள ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்ட வேண்டும்.

அவர் தனது பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீட்டில் இருந்து ரிம10,000 உதவித்தொகை வழங்கவிருப்பதாக அந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

“இந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை புதுப்பித்து வழங்குவதற்கான அதன் முயற்சிகளுக்கு இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று சாவ் மேலும் கூறினார்.

இதனிடையே, டத்தோஸ்ரீ சுந்தராஜு, பெருநிலத்தில் உள்ள கம்போங் மெயின் ரோட்டில் மற்றொரு வீட்டுவசதி தொடர்பான பிரச்சனையின் அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர அயராது உழைத்து வருவதாகவும் சாவ் கூறினார்.

பெட்ரோனாஸ் லங்காசுகா பகுதியில் உள்ள ஹைட்ரோகார்பன் ஆற்றலின் திட்டத்தை செயல்படுத்தக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, பினாங்கின் சாத்தியமான எண்ணெய் ராயல்டிகளைத் தொடர பினாங்கில் திட்டங்கள் குறித்து மாநில சட்ட ஆலோசகர் அல்லது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பேசினீர்களா என்று சாவ்விடம் கேட்கப்பட்டது.

இந்த வளத்தின் மீது சரவாக் ஊக்கமளிக்கும் விற்பனை வரியை விதிக்கும் நடைமுறையில் சந்தேகம் இருப்பதால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு, பெட்ரோனாஸ் தற்போது மூன்று மாநிலங்களின் ஆறுகளில் உள்ள ஹைட்ரோகார்பன் சாத்தியக்கூறுகள் குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாகவும், இது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க இயலவில்லை என்றும் அவர் கூறினார்.