சட்டவிரோதமாக குப்பைகள் வீசுவதை தடுக்க ‘சிறப்பு பதாகைகள்’ பொருத்தப்படும் – டேவிட்

Admin

பிறை – செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) ஏற்பாட்டில் சட்டவிரோதமாக
குப்பைகள் வீசப்படும் பெருநிலத்தின் பிரதான இடங்களில்  மொத்தம் 150 பதாகைகள் பொருத்தப்படும்.

ok

எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல் கூறுகையில், இந்த ‘சிறப்பு பதாகையில்’ சட்டவிரோதமாக குப்பை வீசுவதை நிறுத்த அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கல்வி கற்பிக்கும் ஒரே நோக்கத்துடன் இதில் வலுவான செய்தியுடன் அச்சிடப்பட்டுள்ளது.

“இந்த நடவடிக்கை செபராங் பிறையில் சட்டவிரோதமாக குப்பை வீசுதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கான மாநகர் கழகத்தின் முயற்சியின் ஒரு சாரமாக திகழ்கிறது.

“ஒவ்வொரு பதாகையில் மலாய் மொழி, சீன மொழி மற்றும் தமிழ் மொழியில் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

“இந்த பதாகைகளில் ‘முட்டாள்கள் தான் கண்ட இடங்களில் குப்பை வீசுவார்கள்’ என்ற வாசகம் இடம்பெறுகிறது.

“இதுவரை,  144 பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன, மீதமுள்ளவை விரைவில் அச்சிடப்படும். அடுத்த வாரத்திற்குள் அனைத்து பதாகைகளும்  அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று மார்ஷல்  பிறை, தாமான் இந்திராவாசியில் உள்ள ஜாலான் கிகிக்-ல் ஒரு பதாகையை பொருத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் ஜெசன் ராஜ் கலந்து கொண்டார்.

இந்த பதாகைகள் பொருத்துவதன் மூலம் செபராங் பிறையில் சட்டவிரோதமாக குப்பைகள் வீசும் தரப்பினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்பிக்கை கொள்வதாக டேவிட் தெரிவித்தார். 

“சட்டவிரோதமாக குப்பைகள் வீசுவதை நிறுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக திகழ்கிறது.

“எம்.பி.எஸ்.பி சட்டவிரோதமாக குப்பை வீசும் தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்காது, குறிப்பாக  ரிம2,000 அபராதம் விதிக்கப்படும். 

“பொதுமக்கள் சமூகத்திற்கு பயன் தரும் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

செபராங் பிறை மாநகர்  சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று கூறினார்.