பத்து உபான் – கல்வி மேம்பாட்டில் மிகுந்த அக்கரைக் கொண்ட பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன், தனது தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட பி40 குடும்பங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி பிரத்தியேக வகுப்புகளை வழங்க முன்முயற்சி எடுத்துள்ளார்.

குமரேசன் கூறுகையில், தனது சேவை மையம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் (NGO) ஆதரிக்கப்படும் இந்த கல்வித் திட்டம், மாநில சட்டமன்ற உறுப்பினராக தனது முதல் பதவித் தவணைக் காலத்திலிருந்து நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.
“சுங்கை டுவாவில் உள்ள ஹம்னா டேசா பெர்மாய் இண்டா அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஏறக்குறைய 30 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைகின்றனர். இத்திட்டத்தின் கீழ் ஆங்கிலம், கணிதம், மலாய் மொழி மற்றும் அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

“முன்னதாக தாமான் பெக்காக்கா கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே) மண்டபத்திலும் இலவச பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்பட்டன, ஆனால் குறைந்த வரவேற்பு காரணமாக நாங்கள் அதனை நிறுத்த வேண்டியிருந்தது.
“நான் பத்து உபான் வேட்பாளராக பிரச்சாரம் செய்தபோது தனது தேர்தல் வாக்குறுதிகளில் கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகள் ஆகியவற்றின் மேம்பாட்டில் முக்கிய கவனம் செலுத்துவேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அவரது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன்,17 அன்று பத்து உபான் வேலைவாய்ப்பு கார்னிவல் நடைபெற்றது. இதில் 1,500 வேலை தேடுபவர்கள் ஈர்க்கப்பட்டனர். இந்தக் கார்னிவலின் போது நடத்தப்பட்ட நேரடி நேர்காணல் மூலம் பல பங்கேற்பாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற உதவியது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இலவச வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்வது அவசியம் என்று குமரேசன் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையில், பி.கே.ஆர் தஞ்சோங் கிளைத் தலைவருமான குமரேசன், ஜூலை,19 ஆம் தேதி தொடங்கவுள்ள புதிய கட்சி தலைமையிலான முன்முயற்சி திட்டமான ‘Kelas Tuisyen Bijak Madani’ எனும் இலவச பிரத்தியேக வகுப்புகள் வருகின்ற ஜூலை,19-ஆம் தேதி அதிகாரப்பூர்வ தொடக்க விழாக் காணும் என அறிவித்தார்.
“ஹம்னா அடுக்குமாடியில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சியைப் போலவே, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், மலாய் மொழி மற்றும் அறிவியல் போன்ற முக்கிய பாடங்களை உள்ளடக்கிய இலவச பிரத்தியேக வகுப்புகளை நாங்கள் இங்கு வழங்குவோம்.
“மாணவர்கள் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்ணுதல் ஆகிய அத்தியாவசிய திறன்களை கற்று தேர்ச்சிப் பெறுவதை உறுதி செய்வதற்காக முக்கிய பாடங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
“வகுப்புகளை நடத்துவதற்கு உள்ளூர் கல்வி மையத்துடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஆசிரியர்கள் ஒரு மாணவருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரிம50 வசூலிக்கின்றனர், அதை நாங்கள் முழுமையாக ஈடுகட்டுவோம், இதில் 50 மாணவர்களைச் சேர்க்கும் இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
மேல் விவரங்களுக்கு, ஆர்வமுள்ளவர்கள் 011-6237 3418
(லட்சுமிரா) என்ற எண்ணில் என்ற தொடர்புக் கொள்ளலாம். இந்த வகுப்புகள் கெடா குடியிருப்பு சங்க மண்டபத்தில் நடத்தப்படும்.
மேலும், குமரேசன் STEM கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உள்ளூர் பள்ளிகளுடன் இணைந்து இடைநிலை மாணவர்களுக்கு STEM பட்டறைகளை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
“இந்த வகுப்புகள் நடத்துவதற்கு மண்டபத்தை இலவசமாக வழங்கியதற்காக கெடா குடியிருப்பாளர் சங்கத்திற்கும் அதன் தலைவர் அப்துல் வஹாப் ஷேக் மைதின் தலைவருக்கும் நன்றித் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று குமரேசன் மேலும் கூறினார்.