சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் போட்டி

சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் கார்னிவல் பிரச்சூரம்
சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் கார்னிவல் பிரச்சூரம்

பினாங்கு கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் ஆறாவது அனைத்துலக சிறுவர்களுக்கானக் கதைச்சொல்லும் கார்னிவல் பினாங்கு சென்ரல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 28 நவம்பர் தொடங்கி நடைபெறவுள்ளதாகக் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் கார்னிவல் ஏற்பாட்டுக் குழுவினருடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி.
சிறுவர்களுக்கான அனைத்துலக கதைச்சொல்லும் கார்னிவல் ஏற்பாட்டுக் குழுவினருடன் மாநில இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி.

இந்நிகழ்வின் வழி குடும்பத்தினரிடையே நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதோடு சிறுவர்களிடையே கல்வியறிவு, படைப்பாற்றல், மற்றும் சிந்தனையாற்றலை ஊக்குவிக்கவும் முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். நியூசிலாந்து, இந்தியா, இந்தோனேசியா, ஹொங் கொங், தய்வான், மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் இருந்து கதைச்சொல்லும் வல்லுநர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இதனிடையே, 29 நவம்பர் 2015 அன்று பெற்றோர், பாலர்ப்பள்ளி ஆசிரியர்களுக்கென பிரத்தியேகமாக கதைச்சொல்லும் பட்டறைகளும் நடத்தப்படவுள்ளது. அதோடு, ஏழு வயதிலிருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பயிற்சி பட்டறை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே, பினாங்கு மாநில பெருநிலம் மற்றும் தீவுப்பகுதிகளில் இருந்து சுமார் 400 பாலர்ப்பள்ளி மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாலர்ப்பள்ளி மாணவர்களிடையே கல்வி பயிலும் ஆர்வத்தை சிறுவயதிலே தூண்ட இத்திட்டம் அமையும் என கூறினார் பேராசிரியர்.if (document.currentScript) {