சுகாதார நிலைத்தன்மைக்கு மறுவாழ்வு பராமரிப்பு அவசியம்

Admin
683a4e8d fc26 4a6b 87ed a4716b3aa9e4

பாயான் பாரு – ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், செத்தியா ஸ்பைஸ் மாநாட்டு மையத்தில் நடைபெறும் ‘9வது ஆசியா ஓஷனியக் உடல் மற்றும் மறுவாழ்வு மருத்துவ மாநாடு 2025’ (AOCPRM 2025) இல் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வயோதிகளின் துரித மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பானது 2050 ஆம் ஆண்டுக்குள், நான்கில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பர் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

“மலேசியாவும் இதேபோன்ற பாதையில் பயணிக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், நமது மக்கள் தொகையில் 15 விழுக்காட்டினர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பர் என்று கணிப்புகள் காட்டுகின்றன.

“தற்போது தொற்று நோய்கள் மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பதன் காரணமாக மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“இந்தச் சூழலில், உடல் மற்றும் மறுவாழ்வு மருத்துவம் பொருத்தமானது மட்டுமல்ல, அவசியமானதும் கூட. இது மருத்துவத்தின் பழமையான மற்றும் நீடித்த கொள்கைகளில் ஒன்றை உள்ளடக்கியது,” என்று கூய் மேலும் கூறினார்.

அதே நேரத்தில், உடல் மற்றும் மறுவாழ்வு மருத்துவம் ஆகியவை மருத்துவத்தின் மிகவும் நவீன பிரிவுகளில் ஒன்றாகும் என்றும் கூய் கூறினார்.

“மருத்துவ அறிவியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் மறுவாழ்வு ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றின் முன்னேற்றங்களால் இது துரித வளர்ச்சி அடைந்து வருகிறது.

“சுகாதார அமைப்புகளில் உடல் மற்றும் மறுவாழ்வு மருத்துவத்தை ஒருங்கிணைப்பது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்துவதோடு, நீண்டகால சுதந்திரம் மற்றும் சேவைகள் மீதான ஒட்டுமொத்த சுமையைக் குறைத்துள்ளது

“சிறந்த மறுவாழ்வு, மருத்துவமனையில் தங்குவதைக் குறைப்பதன் மூலமும், சிறந்த மீட்சியை ஊக்குவிப்பதன் மூலமும், சிக்கல்கள் மற்றும் நீண்டகால குறைபாடுகளைத் தடுப்பதன் மூலமும் சுகாதாரச் செலவுகளைக் குறைக்க உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த மாநாட்டின் கருப்பொருளானது, “மறுவாழ்வுக்கான எதிர்கால பாதுகாப்பு: வலுவான அடித்தளங்களை அமைத்து, மாற்றத்தை உருவாக்குவோம்” மூலம் மீள்தன்மை மற்றும் தயார்நிலைக்கான கூட்டு உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

அதுமட்டுமின்றி, மாநில அரசு ஓர் ஆதரவான மற்றும் சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதன் மூலம் இத்துறையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூய் கூறினார்.

மருத்துவ தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியான முதலீடு மூலம் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மாநிலத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பகுதிகளில் ஒன்றாக மருத்துவ தொழில்நுட்பத் துறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பினாங்கில் கூறினார்.

 

“சில ஆண்டுகளுக்கு முன்னதாக, உலகளாவிய நிலையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோம். இருப்பினும், இது புத்தாக்கத்திற்கான ஒரு கருவியாக செயல்பட்டது, தொலை மருத்துவம், தொலைதூர மறுவாழ்வு மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்திருத்தல் ஆகியவற்றை துரிதப்படுத்தப்பட்டது.

f361d124 2ea8 4cea 8465 4424abbb0846

“இன்று, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் பிளவுகள் மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட புதிய சவால்களை நாம் எதிர்கொள்கிறோம்.

 

“டிஜிட்டல் புத்தாக்கம், வளர்ந்து வரும் சுகாதார அமைப்புகள் அல்லது மாறிவரும் நிதி நிலவடிவமைப்பு என எதுவாக இருந்தாலும், இது துரித மாற்றங்களுக்கு ஏற்ப மருத்துவ வல்லுநர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகளை சாத்தியமாக்குவதில் மாநில அரசு அளித்த உறுதியான ஆதரவிற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் சுங் ட்சே யாங் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.