ஜார்ச்டவுன் – பட்டர்வொர்த் இடையிலான இரயில் பாதை அமைக்க மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்

Admin

 

 

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு பாலத்தில் ஒவ்வொரு நாளும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ஜார்ச்டவுன் – பட்டர்வொர்த் இடையிலான இரயில் தடம் நிறுவ புதிய மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு உதவ வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நில & பொருளாதாரம் மேம்பாடு மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், இப்புதிய திட்டம் பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டத்தின் (PTMP) மற்றொரு அங்கமாகும், என்றார்.

“நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட இந்தப் போக்குவரத்து திட்டங்களைச் செயல்படுத்த புதிய மத்திய அரசு உதவும்,” என்று சட்டமன்ற கூட்டத்தொடரின் நிறைவு அமர்வின் போது நம்பிக்கை தெரிவித்தார்.

Pan Island Link 1 (PIL 1) மற்றும் பாயான் லெப்பாஸ் இலகு இரயில் திட்டம் போன்ற பல திட்டங்களை பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் செயல்படுத்த புதிய மத்திய அரசாங்கம் உத்தேசிக்க வேண்டும் என்று கொன் இயோவ் குறிப்பிட்டார்.

“பினாங்கு மாநிலத்தின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை உடனடியாக செயல்படுத்த புதிய மத்திய அரசாங்கத்தை அணுகப்படும்,” என்றார்.

இன்று மாலை நடைபெற்ற மாநாட்டில், பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் தலைவரான கொன் இயோவ், மலேசியாவின் 10வது பிரதமராக அறிவிக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.