ஜாலான் மவுன் எர்ஸ்கின் – ஜாலான் லெம்பா பெர்மாய் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

ஜாலான் மவுன் எர்ஸ்கின் – ஜாலான் லெம்பா பெர்மாய் சாலை சாலை பிளவை சித்தரிக்கின்றது

அண்மையில் ஜாலான் மவுன் எர்ஸ்கின் மற்றும் ஜாலான் லெம்பா பெர்மாய் சாலையில் ஏற்பட்ட சாலை பிளவு காரணமாக அச்சாலை ஆறு வாரங்களுக்கு மூடப்படும் என பொதுப்பணி, பயன்பாடு மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் ஹொக் செங் அறிவித்தார். இருப்பினும் கடந்த 13/10/2016-ஆம் நாள் மூடப்பட்ட அச்சாலை மறுச்சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு 14/1/2016-ஆம் நாள் திறக்கப்பட்டது.
இந்த மறுச்சீரமைப்புப் பணி ஆறு வாரம் என நிர்ணயிக்கப்பட்ட வேளையில் 3 மாதங்கள் ஆகியும் பணிகள் நிறைவுப் பெறவில்லை. எனவே, மாநில அரசு பொதுப்பணி துறைக்கும் குத்தகையாளருக்கும் 1 வார காலக்கெடு வழங்கியது. மேலும், சாலை மறுச்சீரமைப்பு பணிகளில் ஈடுப்படும் குத்தகையாளர் மற்றும் பொதுப்பணி துறையும் விரைந்து செயல்பட்டு கொடுக்கப்பட்ட குறுகிய காலத்தில் நிறைவுச்செய்ய வேண்டும் என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பரிந்துரைத்தார்.
“மாநில அரசு வழங்கும் வாக்குறுதிக்கு ஏற்ப அனைத்து திட்டங்களும் குறுகிய காலத்தில் நிறைவுப்பெற வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
சாலை திறப்பு விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹரி கலந்து கொண்டனர்.
இந்த மறுச்சீரமைப்புத் திட்டத்திற்கு ரிம435,000 நிதி ஒதுக்கப்பட்டது. இந்தச் சாலையில் கனரக வாகனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படாது.