புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு பல்நோக்கு வாகம் நிறுத்துமிடம் ஆலோசிக்கப்படும் – சாவ் கொன் யாவ்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் உடன் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்திவன் சிம் மற்றும் பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் லின்டியா ஒங்

பினாங்கு மாநில அரசு பினாங்கு வாழ் மக்களின் நலத்தில் அக்கறை செலுத்தும் என்பதனை பிரதிப்பலிக்கும் வகையில் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு அருகில் பல்நோக்கு வாகனம் நிறுத்தும் திட்டத்தை அமல்படுத்த எண்ணம் கொண்டுள்ளது என பெராபிட் சட்டமன்ற தொகுதியில் அவ்வட்டார மக்களின் பிரச்சனைகளை கேட்டறியும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் அவர்கள்.
புக்கிட் மெர்தாஜாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மாவட்ட அதிகாரியின் ஓய்வு எடுக்கும் வீடு பத்தாண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்படாமல் உள்ளது. இவ்விடம் புக்கிட் மெர்தாஜாம் நகரில் அமைந்துள்ளது அங்கு பல்நோக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுவதற்கு சிறப்பம்சமாக உள்ளது என குறிப்பிட்டார்.
எனவே, இதன் தொடர்பாக ஆட்சிக்குழு உறுப்பினார் சாவ் கொன் யாவ் மாவட்ட அதிகாரி சுல்கிப்லி லோங்கிடம் நிலக்குழு கூட்டத்தில் அதற்கான ஆவணங்களுடன் விவாதம் செய்ய பரிந்துரைத்துள்ளார். பராமரிக்கப்படாமல் இருக்கும் அவ்விடத்தை மாநில அரசு மற்றொரு நல்ல நோக்கத்திற்கான பயன்படுத்தவிருப்பதை சுட்டிக்காட்டினார்.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பிராபிட் சட்டமன்ற உறுப்பினர் லின்டியா ஓங் பெராபிட் வட்டாரத்தில் ஏற்படும் வாகன நெரிசல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். அதோடு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் இத்திட்டத்தை சிறந்த பயனை அளிக்கும் என்பது வெள்ளிடைமலை.