தெக் டோம் தீபாவளி கொண்டாட்ட

தோரணம் பிண்னுதல் போட்டியில் கலந்து கொண்ட மாணர்வர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர்

மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தலைமைத்துவத்தில் நடப்பு அரசாங்கம் அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையம், (தெக் டோம்) அனைவருக்கும் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு துறையில் ஊக்குவிக்க அமைக்கப்பட்டதாக ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் ” தெக் டோம் தீபாவளி கொண்டாட்டம் ” எனும் நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து தெரிவித்தார்.
மலேசிய நாடு தனது சுதந்திரத்தை பெறும் போது பல இன, மதம் மற்றும் கலாசாரம் பறைச்சாற்றும் மக்கள் கூட்டணியாக அமைந்ததாகக் கூறினார் இராயர். எனவே, நாட்டுப் பற்று கொண்ட மலேசியர்கள் அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்றார்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் யாப் சூ உய் ஆதரவில் அஸாத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் தெக் டோம் மையத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை மேலும் மெருகூட்ட குவாங் அவா சீனப்பள்ளியைச் சேர்ந்த 31 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இந்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கோலம் படத்திற்கு வர்ணம் தீட்டுதல், தோரணம் பிண்ணுதல், பூத் தொடுத்தல் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டிகளை பினாங்கு தாமரை முன்னேற்ற கழகம் மற்றும் மலேசிய இந்திய மாணவர்களுக்கான சிறப்பு மையம் (CEMIS) ஏற்று நடத்தினர்.
தெக் டோம் தமைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கோங் யூன் லோங், தனது வரவேற்புரையில் தெக் டோம் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டு 3 மாதங்கள் ஆனாலும் 20,000 மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகை அளித்துள்ளனர் என அகம் மகிழ தெரிவித்தார்.
நிகழ்வில் மலேசிய இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சேம்பர் பொருளலர் டத்தோ பழனியப்பன் மற்றும் ரமணி ஸ்டோர் தலைமை நிர்வாக அதிகாரி திரு பத்மநாபன் கலந்து கொண்டனர்.