பினாங்கு மாநிலத்தில் மலேசிய தினக் கொண்டாட்டம்

Admin

கடந்த 16 செப்டம்பர் 2013-ஆம் நாள் நம் நாட்டின் 50-வது மலேசிய தினத்தை முன்னிட்டு பினாங்கு மாநிலத்தில் மிக விமரிசையாக ஸ்ரீ பினாங் அரங்கத்தில் நடைபெற்றது. நாம் ஒரு கொடியின் கீழ் ஒற்றுமையாக இருக்க பெருமிதம் கொள்ள வேண்டும் என முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷீத் அஸ்னான், பினாங்கு முதல்வரின் பிரதிநிதியாகக் கூறினார். நம் நாட்டில் பல்லின மக்களுடன் இணைந்து இந்தச் சிறப்பான தினத்தைக் கொண்டாடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

நாம் பொன்விழா ஆண்டை அடைந்திருந்தாலும் இன்னும் இந்நிகழ்வின்நாட்டிலிருக்கும் வறுமை, குற்றம், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. எனவே, பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு பசுமை, தூய்மை, பாதுகாப்பு, ஆரோக்கியம் என்ற ஆட்சிமுறையைத் தனது கோட்பாடாகக் கொண்டு முன்னோக்கி செல்கின்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக கான்வென்ட் லைட் தெரு பள்ளிக்கூட மாணவர்களின் “பசுமை புல் வீடுஎனும் கூட்டுப்பாடல் இடம்பெற்றது. அதோடு, பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் பொற்கரத்தால் அணிவகுப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

மாநில ஆளுநர் அணிவகுப்பில்  மூன்றாவது நிலையில் வெற்றிப் பெற்ற பொது துறையினருக்கு மாதிரி காசோலை வழங்கினார்.
மாநில ஆளுநர் அணிவகுப்பில் மூன்றாவது நிலையில் வெற்றிப் பெற்ற பொது துறையினருக்கு மாதிரி காசோலை வழங்கினார்.