பத்து காவான் தோட்ட நிலப்பிரச்சனைக்குத் தீர்வு – கஸ்தூரிராணி பட்டு

பத்து காவான் தோட்டத்தில் சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஒன்பது குடும்பங்களுக்கு திடீரென தனியார் நிறுவனத்திடம் இருந்து அவ்விடத்தைவிட்டு காலிச்செய்யுமாறு பரிந்துரைத்து அறிப்பு(நோட்டிஸ்) வழங்கப்பட்டன. இதனை அறிந்த அத்தோட்ட மக்கள் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் குமாரி கஸ்தூரிராணி பட்டு அவர்களை நேரில் சென்று அணுகி இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணுமாறு கேட்டுக்கொண்டனர்.

இழப்பீடு பெற்றுக்கொண்ட பத்து காவான் தோட்ட குடியிருப்பாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு.
இழப்பீடு பெற்றுக்கொண்ட பத்து காவான் தோட்ட குடியிருப்பாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு.

பெம்பினாஹான் காயா இண்டா நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக பத்து காவான் தோட்ட குடியிருப்பாளர்களின் இடத்தைக் காலி செய்யக்கோரி நடந்த பேச்சுவார்த்தை வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்ற வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு அவர்கள், திருமதி.குணமலர் வழக்கறிஞர் நிறுவனத்தையும், சட்ட ஆலோசகர் ஷம்சீர் சிங்கையும் குடியிருப்பாளர்கள் சார்பில் நியமித்து அவர்களுக்கு தகுந்த இழப்பீடு தரக்கோரி போராடியது இறுதியில் வெற்றியை தழுவியது. பத்து காவான் தோட்டத்தில் சுமார் இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்த எட்டு குடும்பங்களுக்கு தலா ரிம 43,120-ம் மற்றொரு குடும்பத்துற்கு ரிம 15,000 இழப்பீடாக அத்தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
பத்து காவான் சேவை மையத்தில் நடைபெற்ற முதல் தவணைக்கான இழப்பீடு காசோலை வழங்கும் நிகழ்வில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவ்விடத்தை காலிச் செய்து மீத இழப்பீட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே, இன்னும் மாற்றும் இடமில்லாமல் இருக்கும் ஐந்து குடும்பங்களுக்கு பினாங்கு மாநில மலிவுவிலை வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்குவதற்கு தாம் உதவுவதாகக் கூறினார். மேலும், பினாங்கு மாநில அரசு மக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுக்கும் என்பதற்கு இப்பிரச்சனைக்கு தக்க சான்றாக அமையும் என்றார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);