பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்திற்கு ரிம10,000 நிதி ஒதுக்கீடு

Admin

புக்கிட் தம்புன் கடந்த 21 ஆண்டுகளாக இயங்கி வந்த தென் செபராங் பிறை சிறுநீரக சுத்திகரிப்பு மையத்திற்கு பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு ரிம10,000 –ஐ மானியமாக வழங்கினார்.

துணை பிரதமர் வான் அஜிசா வான் இஸ்மாயில் சிப்பாங் அம்பாட் வட்டாரத்தில் அமைந்திருக்கும் இந்த மையத்திற்கு வருகையளித்த போது இந்த மானியத்திற்கான மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் புக்கிட் தம்புன் மாநில சட்டமன்ற உறுப்பினர் கூய் சூன் ஐக், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ்லியுங், சுங்கை அச்சே சட்டமன்ற உறுப்பினர் சுல்கிஃப்லி இப்ராஹிம், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வர் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ரோசாலி முகமட் கலந்து கொண்டனர்.

வான் அஜிசா உரையாற்றுகையில் தனியாருக்குச் சொந்தமான இந்த சிறுநீரக சுத்திகரிப்பு மையம் பரிந்துரைக்கப்பட்ட விதிகள் பின்பற்றுவது

அவசியம். அதில் சிறுநீரகவியல் நிபுணர் பணிநியமனம் குறித்தும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு சுத்திகரிப்பு மையத்தில் நிபுணர் இருப்பது அவசியம் இல்லை, இருப்பினும் தற்போது சில மையங்களில் விதிமுறைகளைப் பின்பற்றாததால் மருத்துவ சேவை வழங்குவதில் சில தவறுகள் ஏற்படுவதாக கண்டறிந்தோம். எனவே, சுத்திகரிப்பு மைய அமைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்படுகிறது,” என கூறினார்.

இந்த சுத்திகரிப்பு மையம் வசதி குறைந்த பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதாக அதன் நிர்வாகி கோ கெங் ஹுவா கூறினார். இந்த மையத்தை நிர்வகிப்பதற்கு ஒரு மாதத்திற்கு ரிம35,000 நிதி தேவைப்படுகிறது என மேலும் கூறினார். இம்மையத்தில் தற்போது 46 பதிவுச்செய்யப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.