பத்து காவான் மலேசியாவிலே மிக நவீன நகரமாக உருமாற்ற இலட்சியம் – முதல்வர்

பினாங்கு மாநில அரசு பத்து காவான் பகுதியைத் துரித வளர்ச்சியடைந்த சிறந்த பெருநகரமாக உருவாக்குவதில் பல அரிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. பத்து காவான் பகுதி அஸ்பேன் விஷென் சிட்டி (Aspen Vision City) மெகா திட்டத்தில் இரண்டு புகழ்ப்பெற்ற வணிக நிறுவனங்களான வீடமைப்புத் திட்ட மேம்பாட்டு நிறுவனம் அஸ்பேன் குருப் (Aspen Group) மற்றும் தளவாடப் பொருட்களுக்குப் புகழ்ப்பெற்ற “இக்கிய” (Ikano Pte Ltd) நிறுவனமும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. இந்த மெகா திட்டத்தில் அலுவலக கட்டிடம், பேரங்காடி, மருத்துவமனை, வங்கி, தங்கும் விடுதி, கல்வி மையம், ஆடம்பர அடுக்குமாடி ஆகியவை இடம்பெறும்.

அஸ்பென் விஷென் சிட்டி (Aspen Vision City) மேம்பாட்டுத் திட்டத்தைப் பார்வையிடுகிறார் முதல்வர் மேதகு லிம் குவான் எங், அஸ்பேன் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முரளி, அஸ்பேன் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ நசீர் அரிப், முதலாம் துணை முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்.
அஸ்பென் விஷென் சிட்டி (Aspen Vision City) மேம்பாட்டுத் திட்டத்தைப் பார்வையிடுகிறார் முதல்வர் மேதகு லிம் குவான் எங், அஸ்பேன் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முரளி, அஸ்பேன் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ நசீர் அரிப், முதலாம் துணை முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்.

இந்த இரண்டு நிறுவன கூட்டு முயற்சியில் அஸ்பேன் விஷென் சிட்டியில் 3 ஏக்கர் நிலப்பரபில் புதியாக கொலம்பியா ஆசியா மருத்துவமனை நிறுவப்படும். இந்த தனியார் மருத்துவமனை பத்து காவான் பகுதியின் முதல் மருத்துவமனைத் திகழும் என அஸ்பேன் குழு மற்றும் கொலம்பியா ஆசியா நிறுவன உடன்படுக்கை கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார்.
கடந்த ஓர் ஆண்டு காலமாக மாநில அரசு மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ஒன்றிணைந்து பத்து காவான் பகுதியில் பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு மற்றும் பொருளாதார நகரமாக அமைத்து வெற்றி கண்டு வருவது சாலச்சிறந்தது என்றார்.

அஸ்பேன் விஷென் சிட்டி (Aspen Vision City) முதல் மேம்பாட்டுப் பகுதி அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மற்றும் சொத்து வாங்குவோரிடமிருந்து அதிக வரவேற்புக் கிடைப்பதாக மாநில முதல்வர் அகம் மகிழத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அஸ்பேன் குழு ஒசிபிசி வங்கி நிறுவனத்துடனும் (OCBC Bank (M) Berhad) ரிம 196 மில்லியன் நிதி வசதி வழங்கும் பொருட்டு உடன்படுக்கையில் கையொப்பமிட்டனர்.d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);