ஶ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய வருடாந்திர பூஜை

மரியாதை செய்யப்பட்ட ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வொன் ஹொன் சிறப்புரையாற்றுகிறார்
மரியாதை செய்யப்பட்ட ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வொன் ஹொன் சிறப்புரையாற்றுகிறார்

பிரசித்திப்பெற்ற ஶ்ரீ தர்ம முனீஸ்வரர் கோவிலின் ஆண்டு விழாவான வருடாந்திர பூஜை கடந்த ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த வருடாந்திர பூஜை பல ஆண்டுக்காலமாக மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வருடாந்திர பூஜைக்கு முன்தினம் பக்த கோடிகள் பால் செம்பு, பால் குடம், அங்கப்பிரதட்சனை மேற்கொண்டும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
மேலும் அன்றிரவு மாலையில் கோவிலிலிருந்து புறப்பட்ட ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலய இரதம் கம்போங் ஆயர் ஈத்தாம் பகுதியின் வீதி வழியாக ஊர்வலம் வந்தது. தன் எல்லையில் தன்னைக் காண வரும் பக்தர்களை ஆண்டுக்கு ஒரு முறை அவர்களின் எல்லைக்குச் சென்று மகிழ்விக்க இரதத்தில் ஊர்வலம் வரும் முனீஸ்வரரை வரவேற்க ஆங்காங்கே பக்தர்கள் அர்ச்சனைச் செய்ததோடு அன்னதானங்கள் வழங்கினர்.
இவ்விழாவிற்குச் சிறப்பு பிரமுகராக ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வொன் ஹொன் வாய் வருகையளித்தார். ஆயர் ஈத்தாம் பொது மக்கள் ஒற்றுமையுடன் நடத்தும் இந்த சமய விழா ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என்றார். மேலும், ஆயர் ஈத்தாம் பொது மக்களுக்கு உதவும் பொருட்டு அப்பகுதி சேவை மையம் என்றும் தொல் கொடுக்கும் என்றார். மேலும் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தார். காலையில் முனீஸ்வரருக்கு அபிஷேகம் முடிவடைந்ததும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. சிறப்புப் பூஜைகளுக்கும் அர்ச்சனைகளுக்கும் பிறகு கோவிலில் அன்னதானமும் வழங்கப்பட்டது.} else {