பந்தாய் ஜெர்ஜாக் பொது மைதானம் புதுப்பிப்பு

 திரு குமரேசன் பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளுடன் பொருத்தப்பட்ட இரும்பு தடுப்பை பார்வையிடுகிறார்.
திரு குமரேசன் பினாங்கு மாநகர் கழக அதிகாரிகளுடன் பொருத்தப்பட்ட இரும்பு தடுப்பை பார்வையிடுகிறார்.

பந்தாய் ஜெர்ஜாக் சட்டமன்ற தொகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் வேளையில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவதாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு.குமரேசன். அவ்வட்டாரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் பாதுகாப்பு இரும்புகள் இல்லாமை அங்கு விளையாடும் சிறுவர்களுக்கு ஆபத்தாக விளங்கியது.
இதனைக் கருத்தில் கொண்டு பினாங்கு மாநகர் கழக அலுவலகத்தின் நிலவடிவமைப்பு இலாக்கா முயற்சியில் அம்மைதானத்தில் சுற்றியுள்ள கால்வாய் பகுதியில் புதிய பாதுகாப்பு இரும்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக சுமார் ரிம19,000 செலவிடப்பட்டதாக மேலும் விவரித்தார் திரு.குமரேசன். இம்மைதானத்தில் உடல் பயிற்சி கருவிகள் இன்னும் அதிகரிக்க பினாங்கு மாநகர் கழகத்திடம் தாம் முறையிடுவதாகக் கூறினார். பினாங்கு மாநில அரசு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்திற்கு இம்மாதிரியான மைதானங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்தாண்டு தமது சேவையில் குறிப்பிட்டப்படி உடல் ஊனமுற்றோர்கென பிரத்தியேக நடைப்பாதை நிர்மாணிப்புப் பணி விரைவில் தொடங்கும் என குறிப்பிட்டார். இதற்காக ரிம 38,000 செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.