பாதுகாப்பு என்பது தேர்வு அல்ல அவசியம்

டெல்தா நிறுவன இயக்குநர் திரு ஆறுமுகம்

இன்றைய காலக்ககட்டத்தில் பாதுகாப்பு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான தேவையாக திகழ்கிறது என டெல்தா பாதுபாப்பு படை சேவை நிறுவன இயக்குநர் திரு ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் பணிப்புரியும் 2,000 தொழிலாளர்களில் 250 பேர் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர். இந்நிறுவனத்தில் தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம், வருடாந்திர விடுமுறை, மருத்துவச் சலுகை, போனஸ் ஆகிய அடிப்படை சலுகைகள் வழங்குவதன் வாயிலாக உள்நாட்டு தொழிலாளர்கள் அதிகமாக இந்நிறுவனத்தில் பணிப்புரிகின்றனர். மேலும், இந்நிறுவனத்தில் பணிப்புரியும் பாதுகாவலருக்கு அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

தற்போது ஏற்படும் பொருளாதார நெருக்கடி குறிப்பாக நாணய மதிப்பின் வீழ்ச்சியின் தாக்கம் பற்றிய கேள்வி எழுப்பிய போது, தொழில்துறையில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக திரு ஆறுமுகம் கூறினார். இதனால், அந்நிய தொழிலாளர்களைப் பணி நிமித்தம் செய்ய சிரமம் எதிர்நோக்குவதோடு குத்தகை முறையில் வருகைபுரியும் தொழிலாளர்கள் குறுகிய கால வரையறையில் தாயகம் திரும்பி விடுகின்றனர்.

டெல்தா பாதுகாப்புப் படை சேவை நிறுவனம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பாதுகாப்புச் சேவை வழங்குவதில் கடந்த 10 ஆண்டு காலமாக பீடுநடை போட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் கோலாலம்பூரில் செயல்பட்டாலும் இந்நிறுவனத்தின் 40% வியாபாரம் பினாங்கில் இடம்பெறுவதாக அகம் மகிழத் தெரிவித்தார். நாடு முழுவதும் 6 கிளை நிறுவனங்கள் கொண்டுள்ளன.

பினாங்கு மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுச் செய்து வருகிறது. இந்த மேம்பாட்டுத் திட்டங்களினால் தொழில்துறை வளர்ச்சியடைவதோடு பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாநில அரசாங்கத்தின் திறந்த குத்தகை முறை அமலாக்கம் மூலம் வியாபாரத் துறையை மேம்படுத்த முடிகிறது என மேலும் தெரிவித்தார்.